பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை19

கண்டதும் மாடுகளை அவிழ்த்து ஓரிடத்தில் கட்டி நிறுத்திவிட்டு கோவிலையடைந்தனர்.

  “சுவாமி அண்ணன்மாரே! நாங்கள் பஞ்சம் பிழைக்க மாடுகளை ஓட்டி நல்ல
பயிர்பச்சை உள்ள இடத்தில் சென்று மாடு மேய்த்துக் கொண்டு நல்ல முறையில்
ஊர்வந்து சேர்ந்தால் நாங்கள் கறந்த பாலும், பிறந்த பிள்ளையும் உன்பேர் வைத்துக்
கொண்டாடுவோம்” என்று கும்பிட்டு விட்டு பின் மாடுகளை ஓட்டிச் சென்றார்கள்.

  இவ்வாறாக மாடுகளை ஓட்டிக் கொண்டு ஆற்றைக் கடந்து கொளாநிலை வழியே
வந்து தெற்கே வெங்கம்பூர் ஆற்றுப் படுகையில் அதிகமாகப் புல் இருந்ததால் அங்கேயே
கூடாரம் இட்டுத் தங்கி மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். மாடுகளிடமிருந்து
கறந்த பாலைக் காய்ச்சித் தயிராக்கிபின் கடைந்து எடுத்த வெண்ணெயை பெரிய
பானையில் போட்டு ஆற்றுப்படுகையில் குழி தோண்டி அதிலே புதைத்து வைத்து
பாதுகாத்து வந்தார்கள். இந்த வேளையில் வெங்கம்பூரில் ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது.

  வெங்கம்பூரில் பெரிய மிராசுதார்கள் எல்லோரும் சேர்ந்து தங்கள் ஊரில் ஐந்து
நாட்கள் நாடகம் நடத்த திட்டமிட்டபடி நான்கு நாட்கள் நாடகம் முடிந்து ஒரு நாள்
பாக்கியிருக்கும் நிலையில், நாடகம் நடக்கும் போது தீப்பந்தம் பிடிப்பதற்குத்
தேவைப்படும் எண்ணெய் எங்கு தேடியும் கிடைக்காமல் போகவே மிகவும்
கவலைப்பட்டார்கள். அப்போது, மாட்டுக்காரனிடம் வெண்ணெய் கிடைக்கும் என்று
ஒருவன் கூற, அதன்படி மாட்டுக்காரன் ஒருவனை அழைத்தார்கள். உடனே
மாட்டுக்காரன் சென்று விசாரிக்க, மிராசுதார்கள், “எங்களுக்கு இன்று நாடகம்
நடத்துவதற்கு எண்ணெய் இல்லை. ஆகையால் உன்னிடம் இருக்கும் வெண்ணெயை
கொடுக்கவேண்டும். அதற்கு நாங்கள் என்ன கேட்டாலும்