நெய் வாங்கி அவர்களுக்கு காணி கொடுப்பதாகச் சொல்லி ஏமாற்றி விட்டதுமல்லாமல் அவர்களைக் கொல்லவும் நினைத்துத் துரத்தினீர்கள். அவர்கள் பொன்னம்பல சுவாமியைக் கும்பிட்டு முறையிட்டார்கள். சுவாமி மாட்டுக்காரர்கள் பங்கிலிருந்து கொண்டு இந்த நஷ்டத்தைக் கொடுக்கிறார். நீங்கள் மாட்டுக்காரர்களைக் கூட்டி வந்து அவர்களுக்கு சொன்னபடி காணி கொடுத்து மன்னிப்பு கேட்டால் அவர்கள் மனமிரங்கி சுவாமியைக் கும்பிடுவார்கள். பிறகுதான் உங்கள் குடும்பம் தழைக்கும். இல்லாவிட்டால் பொன்னம்பல சுவாமி குற்றத்தால் உங்கள் வம்சம் நாசமடைந்துவிடும்” என்றார் பூசாரி. இதைக் கேட்டவுடன் அவர்கள் எல்லாரும் புறப்பட்டு குமாரமங்கலம் வந்து, “நாங்கள் செய்த குற்றத்தை மன்னித்து எங்களுக்கு நல்ல உத்தரவு வாங்கிக் கொடுக்க வேண்டும்” என்று மாட்டுக்காரர்களிடம் சொல்ல, வாடச் சின்னைய கவுண்டரும், அவருடன் சேர்ந்தவர்களும் அவர்கள்பின் போக மறுத்துவிட்டனர். “உங்களை நம்பி நாங்கள் வருவதற்கு இல்லை” என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார்கள். இதைக் கேட்டு வருத்தப்பட்ட வெங்கம்பூர் கவுண்டர்கள், “உங்கள் குலதெய்வம் சாட்சியாக நாங்கள் உங்களை இனி ஒன்றும் செய்வதில்லை. நீங்கள் கால் காணி கேட்டீர்கள். இப்போது முழுக் காணியாகக் கொடுக்கிறோம். நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும்” என்று கூறி வாதாடினார்கள். பிறகு வாடச் சின்னைய கவுண்டரும் மற்றவர்களும் சம்மதித்து தங்கள் சகலைப்பாடியை வரவழைத்து, “நாங்கள் வெங்கம்பூர் கிராமத்தில் காணி வாங்கி அங்கு போகிறோம். நீங்களும் வாருங்கள்“ என்று அழைத்தார்கள். அதற்கு | | |
|
|