சகலைப்பாடிகள், “நீங்கள்தான் காணி வாங்கிக்கொண்டு போகிறீர்கள். நாங்கள் வந்தால் எங்களுக்கு என்ன கொடுப்பீர்கள்?” எனக் கேட்க, அதற்கு வாடச்சின்னைய கவுண்டர், “உங்களுக்கு முப்பாடுமாவிளக்கு, முந்தின பிரசாதம் கொடுக்கிறோம்” என்று சொன்னார். அவர்களும் சம்மதித்து பட்டலூர் சென்று வேட்டுவக் கவுண்டர்களை அழைத்து அவர்களுக்கும் முன் சொன்னபடி கொடுப்பதாக வாக்களித்து கூட்டிக்கொண்டுவந்து, எல்லோரும் சேர்ந்து வெங்கம்பூர் வந்து அங்கிருந்து வந்தார்கள். சகலைப்பாடிகளை இச்சிபாளையம் கிராமத்தில் குடி வைத்தார்கள். இந்த வரலாறு நான்கர்ண பரம்பரையாகக் கேட்டதாகும். அதையே இந்த நூலில் இடம் பெற வைத்துள்ளேன். | | |
|
|