| ஆராய்ச்சி | | ஒரு தங்கத் தாமரை புலவர் ஐ. ராமசாமி | கொங்கு நாட்டின் பெருமைகளைக் கூறும் இலக்கியங்களுள், “அண்ணன்மார் சுவாமி கதை”யும் ஒன்று. இந்நாட்டில் தொன்று தொட்டுச் சிறந்து விளங்கும் வேளாண்குடி மக்களின் வரலாற்றையும், அவர் தம் வெள்ளை மனத்தூய நெறியினையும், பழக்க வழக்கங் களையும், இறை வழிபாடு, அன்பு, பண்பு, வீரம், விருந்தோம்பல் ஆகிய நலன்களனைத்தையும் இயம்ப வல்ல நூல் இதனினும் வேறொன்றில்லையெனலாம். சுமார் 15-ஆம் நூற்றாண்டுவாக்கில் வடக்கே ஆனை குந்தியை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தில் கொங்கின் மேல்பகுதி சிறந்து விளங்கவில்லை எனலாம். வேளாண்குடி மக்களைக் காட்டிலும் மற்றையோர் அதிகாரம் மிகப் பெற்று விளங்கினர் என்பதைக் காணலாம். புஜபல ராமராயர் (1542-1565) *காலத்தில் தலைக் கோட்டைச் சண்டைக்குப் பின்னர் விஜயநகர அரசு அழியத் தொடங்கவும், கொங்கு நாட்டில் வேட்டுவரில் சிலர் கொங்கு நாட்டைப் பிரித்துச் சாசனம் செய்து கொண்டார்களென்றும் தெரிகின்றது. இந்தக் காலத்தில்தான் அதாவது, 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் கொங்கு நாட்டில் நாட்டதிகாரம் செய்பவர்களுக்கும் வேளாண்மை புரியும் -------------------------------------------------------------------- *D. No. 3139 of O.T.M. Library, Madras. | | |
|
|