பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை25

வேளாண்குடி மக்களுக்கும் பூசல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். கொங்கு பகுதியில்
மணலூர் நாட்டில் 18 பங்காளிகள் (வேட்டுவர்) பங்கு போட்டனர் என்பதைக் கீழைக்
கலைக் கையோட்டுப் பிரதிச் சாலை சாசனங்களால் அறிகின்றோம்.

  “பதினெட்டு நாட்டுக்கும் தலையூர்க்காளி
   பாங்காகச் சீட்டெழுதி.....”

   என இந்த அண்ணன்மார் கதையில் வருவதால் அந்தக் காலத்தில் வேட்டுவர் 18
இடங்களில் ஆண்டு வந்தனர் என்பதை அறிகின்றோம். இராயர் அரசாட்சிக்குப்
பின்னரே இந்த வேட்டுவர்க்கும் கீழ்க்கொங்கின் பகுதியில் கொல்லிமலைவரை குறுநில
மன்னர்களாக ஆண்டு வந்த வேளாளரில் பொன்னர், சங்கர் ஆகியோருக்கும் அரசியல்
காரணமாக வேற்றுமைகள் ஏற்பட்டு அது காரணமாக எழுந்த நூலே இந்த அண்ணன்மார்
சுவாமி கதை என்பதும் விளக்கமாகின்றது. ‘மேனாட்டு வேடுதளம்’ என்பதால் வேட்டுவர்
மரபினர் கொங்கின் மேல் பாகத்தில் விஜயநகர அரசு மங்கியபின் குறுநில மன்னர்களாக
ஆளத் தொடங்கி விட்டனர் எனவும் அறிகின்றோம்.

   வெள்ளைமனக் குன்றுடையானும் தாமரையும் அவன் மக்களும் வேளாண்குடி
மக்கட்கு கடவுளாயினர். கொங்கின் எல்லாப் பகுதியிலும் பொன்னர், சங்கர் கோயில்கள்
உள்ளன. மேல் கொங்கிலும் இவர்கட்குக் கோயில் உண்டு. மதுக்கரைச்
செல்லாண்டியம்மன்* என்ற உச்சினி மாகாளியம்மன் சேர மன்னர்களுக்குக்
குலதெய்வமாக விளங்கினாள். அந்தத் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அண்ணன்மார்
கதையை இசையால் உடுக்கை தட்டிப் பாட ஆரம்பித்தால் கேட்பவர் உள்ளங்கள்
சத்தியம், தர்மம் என்ற
--------------------------------------------------------------------
*தட்சிண இந்திய சரித்திரம் (பக்கம் 630)