பக்கம் எண் :

26அண்ணன்மார் சுவாமி கதை

உணர்ச்சியால் கட்டுப்படும். வீரத்தால் நரம்புகள் முறுக்கேறும். சில
நூற்றாண்டுகளின் முன்னைய நாகரிக மக்களோடு பேசுகின்றது போன்ற உணர்ச்சி
உண்டாகும்.

   இந்நூலின் எல்லா அடிகளும் கற்போர்க்கு உணர்ச்சியை ஊட்டுவன. தான் பிறந்த
நாட்டின் மலைகள், ஆறுகள், நாடுகள், பிரிவுகள் அமைத்தையும் ஆங்காங்கு கூறி
மகிழ்கின்றார். கொங்கின் 24 நாட்டுப் பிரிவு ஏற்படுவதற்கு முன்னால் இந்நூல்
யாக்கப்பட்டதாதல் வேண்டும். வேறு வேறு நாடுகளின் பிரிவுகள் இதில்
கூறப்பட்டுள்ளனமுன் ஒரு காலத்தில் நாரை சூழ்ந்த நாடு 24, கோட்டை சூழ்ந்த வடபாரி
சார நாடும், குன்றத்தூர் நாடு 12 என்று 42 நாடுகள் ஒரு காலத்தில் இருந்தவையாம்.
நாட்டெல்லைகள் மாறி மாறி அமைவது இயல்புதானே!
 
  “நாலுசதுரகிரி சதுரகிரி வீரமலை”
  “கொல்லிமலைக் கோம்பை புண்ணத்தூர்ச் சரிவில்”

“பச்சைமலைக் கானகத்தே தெய்வம்
  பார்த்து வருகையிலே”

“சென்னிமலைபோலே சம்பான்
  சேர்த்துக் குவித்தானே”

“வெள்ளியங்கிரி மலைபோல
  விரசாய்க் குவித்தானே”

“பழனிமலை போலே சாம்பான்
  பார்த்துக் குவித்தானே”

“ஆதிகருமலைபோல் அழகாய்க் குவித்தானே”
  “மருதமலை போல் வளர்த்துக் குவித்தானே“