என்றெல்லாம் தன் நாட்டுத் தெய்வங்கள் வாழும் மலைகளையும், | | | “கொங்கு மழை பொழிய குடவனாறு தண்ணீர் வர ஆனைமழை பொழிய அந்த ஆம்ராந்து (அமராவதி) தண்ணீர் வர வெண்மலைமேல் மழைபொழிய வெண்ணிலையாறு தண்ணீர்வர” தன்மலைமேல் மழைபொழிய அங்கே நங்காஞ்சி தண்ணீர்வர பொன்மலைமேல் மழைபொழிய ( பொன்னிநதி) தண்ணீர்வர | எனத் தன் நாட்டு ஆறுகளையும் இயம்பி மகிழ்கின்றார். இவ்வாறு தெய்வத்தன்மை வாய்ந்தன போல் குன்றுடையான் மனமும் தெய்வத்தன்மையுடையதன்றோ? கொங்கு நாட்டில் கல்லாங்காடுகளும், கரிய நொச்சி மரங்களும் காணப்படுவது, குழந்தை குன்றுடையானை, “ஊமை செவிடு இது ஊதாத சங்கு” எனக் குறித்தது. சோளம் குத்திப் போட்டுக் கஞ்சி குடித்தல், ஒன்றும் அறியாதானை வெள்ளை மனத்தானை, ‘மங்கு மசையா’ எனல், முறைப்பெண்ணை மணப்பதில் மகிழ்ச்சி, குடி கெடுப்பானைக் கூழை எனல், கருவேல மரத்தில் கட்டி அடித்தல், சாட்டால் பொதியளத்தல், கொங்கணக் கம்பளியும் போட்டுக் கொப்பிகட்டிய கவையும் ஊன்றி நடத்தல், தமுக்கடித்துச் செய்தியை ஊரார்க்கு அறிவித்தல், அம்பலத்துக்கு ஆணும் அடிக்கிளைக்குப் பெண்ணும் என்ற பழமொழி, ‘அருள்வரப் பெறுதலைச் சன்னத்தம்’ ஆதல் எனல், இணுங்குச் சோளம் குத்தல், மணியம் கணக்குப் | | |
|
|