பார்த்தல், அஞ்சுமணிக் கயிற்றால் அடித்தல், குடைசீத்தை முள்ளைக் கோழியின் காலில் கட்டுதல், செம்பூலாஞ்செடி வனத்தில் புலி வாழ்தல், புரவிக்குப் புலிநகச் சங்கிலி அணிவித்தல், பல்லி சொல் கேட்டல், தெய்வங்களுக்குப் பூசைபோடுதல், குதிரையைப்பலவாறு அலங்கரித்தல், கனவு கண்டு சொல்லுதல், உடன் பிறப்பை எண்ண ஓரானைப்பலம் வரும் எனல், பிரம்புக் கூடையில் சோறு இடல், பல்லாங்குழியாடுதல், மாவிலங்க மரத்தில் மரநாழி கடைதல், அதன் மேல் பொன்முலாம் பூசுதல், ஊணான் கொடி பிடுங்கிக் கட்டுதல், தேங்காய் உடைத்து சகுனம் காணுதல், தாம்பூலம் தரித்தல் எனப் பற்பல செய்திகள் இந்நூலில் கூறப்பட்டள்ளன. கரிகாற் சோழன், சிவசோழன், படைவீரர் துலுக்காணி ராவுத்தர் என்ற பெயர்கள் கூறப்படுவதால் பிற்கால 16, 17 நூற்றாண்டுகளிலும் மூவேந்தர் பெயர்களால் சேரன், சோழன், பாண்டியன் என்று பெயர் வைத்துக் கொண்டு நாடுகளைக் குறுநில மன்னர்கள் பிற்காலத்தில் ஆண்டு வந்தனர் என்று தெரிய வருகின்றது. எனவே இந்நூல், நாட்டாட்சியின் நிமித்தம், குறுநில மன்னர்களுக்கிடையே ஏற்பட்ட பூசல்களை எடுத்து விளக்கும் திறத்தால் உண்மைக்கும் நீதிக்கும் என்றும் எப்போதும் உயர்வுண்டென்ற நல்ல பண்பினை எடுத்து விளக்குவதாகவும், உண்மையானவர் கடவுளுக்கு ஒப்பாவார் என்பதனை இயம்புவதாகவும் உள்ளதால் இதை அனைவரும் கற்று மகிழ்தல் கடனாகும். | | |
|
|