| ஆதார விளக்கம் | | காலக் கணிப்பு வித்துவான் வி. இராமமூர்த்தி B. Lit. (வீயாரெம்) | “அண்ணன்மார் சுவாமி கதை” என்னும் இந்நாட்டுப் பாடல் இலக்கியம் தமிழக மக்களால் அதிகமாக அறியப்படாத ஒரு அருமையான நாடோடி இலக்கியம். கிராமியக் கலைஞர்களால் உடுக்கை அடித்து வீராவேசத்துடன் பாடப்படும்போது பாடுபவரையும், கேட்பவரையும் ஒருங்கே உணர்ச்சிவசப்பட்ட வைக்கும் ஒரு வீர காவியம். ஆனாலும் காத்தவராயன் கதை, மதுரை வீரன் கதை போன்ற கிராமிய இலக்கியங்களை தமிழகத்து அனைத்து கிராம மக்களும் அறிந்து வைத்திருப்பது போல், இதனை அறிந்து வைத்திருக்கவில்லை. காரணம் இக்கதை கொங்குநாட்டின் வரலாறு, தமிழக வரலாற்றோடு இணையாமல் தனித்து அதே சமயத்தில் பலரும் அறியத்தக்க வகையில் தெளிவாகவும் இல்லாமல் இருப்பதைப் போல கொங்கு வேளாள இன மக்களால் மட்டும் செவிவழி இலக்கியமாக பாடப்பட்டு வந்ததினாலேயாகும் என்று எண்ணத் தோன்றுகின்றது. அன்றியும் வேளாள மக்களுக்கும் வேட்டுவ மக்களுக்குமிடையே நடந்த ஒரு போராட்டமாக பாமர மக்களால் சித்தரிக்கப்பட்டு வந்ததும் இது நாடறிந்த இலக்கியமாக மாறாமைக்குக் காரணம் என்றும் சொல்லலாம். உண்மையில் இது அத்தகைய ஒரு | | |
|
|