பக்கம் எண் :

30அண்ணன்மார் சுவாமி கதை

இனப் போராட்டத்தை சித்தரிக்கும் இலக்கியமல்ல என்பதை இதனைத் திறனாய்வு
நோக்கத்துடன் ஊன்றிக் கவனிக்கும் போது தெரியவருகிறது. பொன்னர், சங்கரோடு
போர் தொடுத்த வேட்டுவத் தலைவன் காளி இன வேற்றுமை காரணமாகப் போர்
தொடுக்கவில்லை. பொன்னர் சங்கர் குடும்பத்தாரிடையே ஏற்பட்ட தாயாதிப் பூசல்
காரணமாக வேளாள இனத்து வந்த சிலராலேயே அதாவது பொன்னர், சங்கரின்
சிற்றப்பன்மார்கள் காளியின் உதவியை நாடி தங்களின் பகைவராக எண்ணிய
குன்றுடையாக் கவுண்டரின் மக்களை அழிக்க வேண்டியதாலேயே காளி, பொன்னர்
சங்கரைக் கொல்லப் போர் தொடுத்தான்.

      போரில் வெல்ல முடியாத போது பங்காளிகளின் உதவியுடனே சூழ்ச்சிகள்
மேற்கொண்டான். இறுதியில் பொன்னர், சங்கர் வீரத்தினால் காளியும் அவன் படை
வீரர்களும் தோற்றனர். ஆனால் வஞ்சகமாக சங்கர் கொல்லப்பட்டதால் மானத்தையே
உயிரை விட மேலாகக் கருதிய பொன்னரும் தன் உயிரை மாய்த்துக் கொள்ள
இருவருமே தெய்வமாகின்றனர். ஆகவே இந்த இலக்கியத்தை ஒரு இனப் போராட்ட
இலக்கியமாகக் கருதுதல் தவறேயாகும்.
 
கதையம்சம்
 
     இந்த அருமையான இலக்கியத்தில் விளக்கப்படும் கதை வீரம், தியாகம், சகோதர
பாசம், நாட்டுப்பற்று, சத்தியம் காக்கும் உத்தமப் பண்பு போன்ற நல்லோர்கள்
பின்பற்றும் நற்குணங்கள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதாகும்.
இராமாயணக்கதாநாயகனான இராமனைப் போலவும் பாரதக் கதாநாயகனான தருமனைப்
போலவும் உத்தமமான கதாபாத்திரங்களான பொன்னர், சங்கர் என்ற இரு
சகோதரர்களைப் பற்றியும் அவர்களது வீர வாழ்க்கை