பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை31

வரலாற்றையும் கூறும் ஒரு ஒப்புயர்வற்ற காவியமாகும் இது.

   இதில் நாடக வழக்கும், உலகியல் வழக்கும் ஒருங்கே காணப்படுகிறது.
அருமையான வசன நடை ஆங்காங்கே துள்ளு நடை போடுகிறது. கொங்கு
வேளாளர்களுக்குரிய உயர்ந்த பண்புகள், உபசாரத் திறன், அன்றாடப் பழக்க
வழக்கங்கள் போன்ற பல நல்ல குணாதிசயங்களைத் தெளிவாகக் காட்டுகிறது. அதோடு
அவர்களது தெய்வ நம்பிக்கையும், சாதிக் காழ்ப்பற்ற சமுதாய ஒற்றுமைப் போக்கும் இந்த
நாடோடி இலக்கியத்தைப் போல வேறு எதிலும் அத்தனை தெளிவாகக் கூறப்படவில்லை.

   பிச்சன் என்னும் பெயருடைய புலவர் ஒருவர் இந்த அண்ணன்மார் சுவாமி
கதையைப் பாடியுள்ளார். ஆயினும் இதே கதையை விளக்கும் பொன்னழகர் என்னும்
கள்ளழகர் அம்மானை என்ற நாடோடி இலக்கியத்தின் வரிகளில் பெரும்பாலானவை
இதிலும் கையாளப்பட்டுள்ளதால் பிச்சன் பாடிய இந்நூலுக்கு கள்ளழகர் அம்மானையே
முதல் நூலாக இருந்திருக்க வேண்டும். கள்ளழகர் அம்மானையைப் பாடிய புலவர் யார்
என்று தெரியவில்லை. ஆயினும் அதன் காலத்தையும் நாம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டிற்கு
முன்னால் நிர்ணயிக்க முடியாது.

   ஆனால் இக்கால நிர்ணயம் கதையின் சம்பவங்களுக்குப் பொருந்தாது. அந்தக்
கதையை நாடோடி இலக்கியமாக ஆக்கப்பட்ட காலமே கி.பி. 14-ஆம் நூற்றாண்டிற்குப்
பின்னால் ஆகும். இக்காலக் குறிப்புக்கூட கள்ளழகர் அம்மானையில் காணப்படவில்லை.
அதன் வழி நூலான பிச்சன் பாடிய அண்ணன்மார் கதையிலே காணப்படுகிறது.
இக்கதையின் பின்னால் தேவியிடம் சங்கர், “இப்படித்தான் உன்னருகில்
இருந்தோமேயாகில் எங்கள் பசியாறுமோதான்.