பக்கம் எண் :

32அண்ணன்மார் சுவாமி கதை

எங்களை யாரென்று தானறிவார்?” என்று கேட்குமிடத்தில் தேவி அதற்குப் பதில்
சொல்லுமிடத்தில், “வீரப்பூர் பகுதியை கம்பைய நாயக்கன் என்ற பெயரையுடைய
கம்பளத்தான் அரசாளுகிறான். அவன் மூலமாக உங்களுக்கும் பூசை போடச் சொல்லி
உங்கள் வரலாற்றை உலகிற்கு அறிமுகப்படுத்த வகை செய்” என்பதாகக் கூறப்படுகிறது.
 
கம்பைய நாயக்கன்
 
     இக் கம்பைய நாயக்கன் என்னும் கம்பளத்தான் விசய நகர அரசனான மூன்றாம்
ஸ்ரீ ரங்கராயன் காலத்தில் (கி.பி.16-2-1642) கொங்கு பகுதிக்குச் சிற்றரசனாக இருந்தவன்
என்று தெரிகிறது. இந்த ஸ்ரீ ரங்கராயன் பெயரும் இதில் ஓரிடத்தில்
குறிக்கப்படுவதிலிருந்து இந்த முடிவு பொருத்தமானதாக அமைகிறது. ஆயினும் ஸ்ரீ
ரங்கராயனுடைய ஆட்சி அல்லல் மிகுந்ததாக விளங்கியதால் கம்பைய நாயக்கனை
அவனது அரசப் பிரதிநிதி என்று கூறுவதற்கில்லை. கம்பைய நாயக்கன் சிற்றரசு
நிலையிலும் ஒரு சுதந்திர அரசனாகவே விளங்கியவன் என்று தெரிகிறது. இவன் பெயரில்
தருமபுரி மாவட்டத்தில் கம்பைய நல்லூர் என்று ஒரு ஊரே உள்ளது. எனவே இவ்வாறு
பெருமையுடன் ஆண்ட கம்பைய நாயக்கனை நாம் திருமலை நாயக்கருக்கு அடங்கிய
ஒரு நாயக்க சிற்றரசனாகக் கருதலாம்.

     இக் கம்பைய நாயக்கன் காலத்தில் பொன்னரும், சங்கரும் அமர நிலையில் இருந்து
தேவியிடம், “நாங்கள் வள நாட்டை விட்டு வனத்தில் வந்து மாண்ட பின்பு இத்தனை
நாளும் இருந்தோம் பரிவாரமாய்” என்று கூறுவதால் இவன் காலத்திற்கு முன்னரே
ஏறக்குறைய ஒரு நூறு வருஷங்களுக்கு முன்னதாகவேதான் இக்கதை