நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் அது கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை ஓரளவு பெருமையுடனே அரசோச்சி வந்த பிற்காலச் சோழ மன்னர்களுள் ஒருவரது காலத்திலும் நிகழ்ந்திருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது, அப்படி நடந்து இருக்குமேயானால் அது மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலத்திலாதல் வேண்டும். இம்முடிவை ஏற்றுக்கொள்வதற்கு சில வலிமையான சான்றுகளும் உள்ளன. அதாவது இக்கதையில் குறிக்கப்படும் சோழ மன்னர் சிவசோழர் எனவும், கரிகால்சோழர் எனவும் பல இடங்களில் அடிக்கடி குறிக்கப்படுகிறார். இவற்றுள் சிவ சோழர் என்ற பெயர் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்குப் பெரிதும் பொருந்துவதாக உள்ளது. இம்மன்னன் சிறந்த சிவ பக்தன் என்பதை இவனைப் பற்றிய முழு வரலாற்றின் பல முனைகளிலும் உறுதியாக நிறுவப்படுகிறது. திருவாரூரில் எழுந்தருளியுள்ள இறைவன் தம் கோயில் தானத்தார்க்கு அருளிய உத்தரவொன்றில் இவ்வரசர் பெருமானை (குலோத்துங்கன்) நம் தோழன் எனக் கூறியுள்ளனர் என்று அவ்வூரில் உள்ள இவனது கல்வெட்டு ஒன்று உணர்த்துகிறது. இதிலிருந்து இச்சோழ மன்னனது சிவபக்தி மாண்பு நன்கு தெளிவாகும். ஆனால் கரிகால் சோழன் என்ற பெயர் இம் மூன்றாம் குலோத்துங்கனுக்கு முன்னால் ஆண்ட இரண்டாம் இராசாதிராசனுக்குரிய பட்டப் பெயராகும். ஆனால் இவ்விரு சான்றுகளை மட்டும் கொண்டு நாம் பொன்னர் சங்கர் வாழ்ந்த காலம் இரண்டாம் ராசாதிராசன் அல்லது மூன்றாம் குலோத்துங்க சோழரது காலம் என்று கொள்வதற்கு தடையொன்றும் உள்ளது. அத்தடை சோழரது தலை நகரம் உறையூர் என்று குறிக்கப்படுவதேயாகும். மேற் சொன்ன இரு மன்னர்களது காலத்திலும் உறையூர் | | |
|
|