பக்கம் எண் :

34அண்ணன்மார் சுவாமி கதை

தரைநகரமாக விளங்கவில்லை. உறையூர் நகரமானது, கி.பி.1400 தலைக்கு
சோழர்கள் சிற்றரசு நிலைமை அடைந்த பிறகேயாகும். கி.பி.1470-ஆம் ஆண்டிற்கு
பக்கமாக உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு அக்கள தேவ சோழ மகாராஜா என்ற
பெயருடைய சோழர் ஒருவர் ஆண்டு வந்ததாக புதுக்கோட்டை மாவட்டம்
கோனாட்டிலுள்ள வெள்ளனூர்க் கோயில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இதே சோழ
மன்னர் உறையூரை ஆண்டதைத் திருவானைக்கா (திருச்சி மாவட்டம்) கல்வெட்டு
ஒன்றும் உறுதி செய்கிறது.

  இவன் காலத்தில் கோனாடு முழுவதும் இவனது ஆளுகையின் கீழ் இருந்து
வந்திருக்கிறது. ஆயினும் இவன் விசயநகர அரசன் சதாசிவ மகாராயனுக்கு
அடங்கியவனாக ஆண்டு வந்திருக்கிறான். இவனுக்கும் கோனாட்டிற்கும் உள்ள
தொடர்பைக் காணும்போது கோனாட்டின் ஒரு பகுதிக்கு பொன்னரும், சங்கரும்
சோழனது பிரதிநிதியாகச் சில காலம் ஆண்டது இச்சோழ குறுநிலமன்னனது
காலத்திலேயே ஆதல் வேண்டும் என்று தெரிகிறது. இக்காலத்திலேயே கொங்கு நாடு
சரியான அரசாள்வோர் இன்றி அல்லல் உற்றுக்கிடந்தது.

  தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை நிலவியது. எனவே இறுதியாக நாம்
இந்த சோழர குலச் சிற்றரசன் காலத்திலேயே பொன்னரும், சங்கரரும் உயிரோடு
வாழ்ந்து இருக்கிறார்கள் என்று கொள்வதே பொருத்தமாகும். அங்ஙனமெனில்,
பொன்னர்-சங்கரின் காலம் கி.பி.15-ஆம் நூற்றாண்டின் இறுதி பாதியே என்று நாம்
உறுதியாகச் சொல்லலாம். மேலும் இக்கதையில்,

“பதினெட்டு நாட்டுக்குத் தலையூர்க்காளி
  பாங்காகச் சீட்டெழுதி”