பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை35

என்ற ஒரு வரியும் வருகிறது. இதனைக் கீழைக் கலை கையெழுத்து பிரதி
நூலகத்தின் சுவடிச் சாசனம் ஒன்றும் கொங்கின் மணலூர் நாட்டில் வேட்டுவர் 18
பங்காளிகளாக பங்கு போட்டுக் கொண்டனர் என்று கூறுகிறது. இவ்வாறு பங்குபோட்டுக்
கொண்ட காலம் கி.பி.15-ஆம் நூற்றாண்டின் இடைக்காலமேயாகும். இவ்வாறு 18 பங்காக
போட்டுத் தமது தலைமையின் கீழுள்ள நாட்டை வேட்டுவர் ஆண்டு வந்தமையால்தான்
போலும், காளி பதினெட்டு நாட்டுத் தலைவர்களையும் வரவழைத்து ஆலோசனை கலந்த
செய்தி அண்ணன்மார் கதையில் குறிக்கப்படுகிறது. எனவே இந்தச் சான்றையும் கொண்டு
பொன்னர் சங்கரின் காலம் 15-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியே என்று உறுதியாகக் கூறலாம்.
 
   பொன்னர் சங்கரின் குலம்
 
  இவ்விலக்கியத்தின் கதாநாயகர்களான பொன்னரும் சங்கரும் வரகு உண்ணாத
பெருங்குடியில் தோன்றியவர்கள் என்றே குறிக்கப்பட்டுள்ளனர். கொங்கு வேளாளர்களின்
கூட்டங்களுள் இவர் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படவில்லை.
கள்ளழகர் அம்மானையில் “பாண்டி நாட்டுக்காராளன் படுபாவிப் பெருங்குடியான்” என்று
மண்ணுடையாக் கவுண்டர் குறிக்கப்படுகிறார். பாண்டி நாட்டுக்காராளன் என்றால்
இவர்கள் கொங்கு வேளாளர் அல்லவோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால்
பெருங்குடியான் என்ற சொல்லைக் கொண்டு பெரிய கலமான வேணாவுடையக்
கவுண்டரின் மரபில் வந்தவர்களோ என்று நண்பர் புலவர் செ.இராசு ஒரு ஐயத்தை
எழுப்பியுள்ளார். ஆனால், கள்ளழகர் அம்மானையில் பொன்னண்டார், பொன்னுவள
நாட்டார் என்று குறிக்கப்பட்டுள்ளதைக் கொண்டு பொன்னரும்,