பக்கம் எண் :

36அண்ணன்மார் சுவாமி கதை

சங்கரும் பொன்னர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாமோ என்று எண்ணத்
தோன்றுகிறது.

  இப் பொன்னர் குலம் மிகப் பழமையான ஒரு குலமாகும். சமீபத்திய
ஆராய்ச்சிகளின் பலனாக இப்பொன்னர் கூட்டத்தினரின் பூர்வீகம் கர்நாடக மாநிலம்
கோலார் மாவட்டத்தின் தென் பகுதியான பொன்குன்ற நாட்டில் துவங்குகிறது.
இப்பொன்குன்ற நாடு சங்க நாள் முதல் சிறப்புற்ற நாடு. தூர நாடு என்று கொங்கணி
அரசர்களின் செப்பேடுகளில் குறிக்கப்படும் துவரை நாட்டை ஆண்ட இருக்கோவேள்
என்னும் மன்னனைச் சங்க இலக்கியங்கள் பொன்படு மால்வரைக் கிழவன்(தலைவன்)
என்று அழைப்பதிலிருந்து இப் பொன்குன்ற நாடு அவன் கால முதல் சிறப்புடன் திகழ்ந்த
நாடாகத் தோன்றுகிறது.

  இந்நாட்டில் பெரும்பாலும் வேளாள மக்களே வாழ்ந்தனர். இந்நாட்டின்
தலைவர்களான காமிண்டர்களும் தங்கள் பெயருடன் பொன்மாந்தனார்,
பொன்னரம்பனார், பொற்சேந்தியார் என்று பொன் என்ற தமது நாட்டுப் பெயரைச் சூடி
வந்துள்ளமைக்கு வடகொங்கு நாட்டையும், கங்கு நாடுகளையும் ஆண்ட காடவர்
அரசர்களின் நடுகற்களில் (செங்கம் நடுகற்கள் - தமிழ்நாடு தொல்பொருள்துறை
வெளியீடு) சான்றுகள் காணக்கிடக்கின்றன. இப்பொன்குன்ற நாட்டு வேளாளப் பெருந்
தலைவர்களின் குடும்பத்திலிருந்து காடவர் பெண் எடுத்துச் சம்பந்தம் செய்தும்,
அவர்களுக்கு முழு உரிமையுடன் கூடிய அரசுப் பொறுப்பு அளித்தும் அவர்களைப்
பெருமளவிற்கு ஆதரித்து வந்துள்ளனர். எனவே இப்பொன்குன்ற நாட்டு வேளாளர்களே
பொன்ன கூட்டத்தவர் எனலாம்.

  இப்பொழுதைய கொங்கு நாட்டில் வடகொங்கு நாடாக ஒரு காலத்தில் விளங்கிய
தருமபுரி உள்ளிட்ட வடக்கு