நாடுகளிலிருந்தும், தொண்டை நாட்டின் மேற்கு வடமேற்குப் பகுதி நாடுகளிலிருந்தும் வேளாளர் குடியேற்றங்கள் வடபாரதத்தில் இசுலாமியர் படையெடுப்பும், விசய நகரப் பேரரசு எழுச்சிக்குப் பிறகு அங்கு நிலவிய அமைதியற்ற நிலையும் துன்பம் விளைவித்த போதே, அதாவது, கி.பி.14-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொங்கில் குடியேறினர். எனவேதான் பல கூட்டப் பெயர்கள் அவர்களின் பூர்வீக நாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. (உ-ம்) ஆந்தை கூட்டம் - ஆந்தைப்பாடி நாடு. வேணாவுடையார் குலம் - வேணாட்டை (திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதி) அடிப்படையாகக் கொண்டது. செங்கண்ணர் கூட்டம் - செங்கண்மா நாடு (செங்கம்) தூரன் கூட்டம் - தூர நாடு அல்லது துவரை நாடு. பொன்ன கூட்டம் - பொன் குன்ற நாடு. பனையன் கூட்டம் - பனைய நாடு. இவை அனைத்தும் காடவ அரசர்களின் ஆட்சிக்கும், அதியமான் அரசர்கள் ஆட்சிக்கும் உட்பட்ட நாடுகளே. எனவே பொன்குன்ற நாடான கோலார் மாவட்டத்தின் தென்பகுதி நாடுகளிலிருந்து வந்தவர்களே நேராக வாழவந்தி நாட்டில் (நாமக்கல் தாலுக்காவின் வடக்கு பாகம்) குடியேறினர். தங்கள் பூர்வீக நாட்டின் பெயர் விளங்க அந்நாட்டிற்குப் பொன்னுவளநாடு என்றும் பெயரிட்டனர் போலும். இதனைத்தான் அண்ணன்மார் சுவாமி கதை, வடக்கே வடதேசம் வாளவந்திப் பட்டணத்தில் துலுக்கான தேசத்திலே அது துடுக்கு பெருத்ததிலே அந்த நல்ல சீமையிலே ஆண்டு வந்தார் காராளர் என்று குறிக்கிறது. கள்ளழகர் அம்மானை இதனையே, | | |
|
|