என்று குடியானவர்கள் இதமுடனே சொன்னார்கள் அப்போது தூதர் அவர்களை நிறுத்திவைத்து சிவசோழ ராஜரிடம் சீக்கிரமாய் ஓடிவந்து சுவாமி பராக்கென்று தூதர் பாதம் பணிந்து நின்று ரெத்னாசலமூர்த்தி ராஜலிங்க அய்யருட கோவில் கிராமத்து குடியான பேர்களெல்லாம் கொள்ளை கொடுத்து குடித்தனம் பண்ண முடியாமல் சுவாமி பாதம் பணிந்து அறிக்கைவிட வேணுமென்று அவர்கள் ஆராய்ச்சி மணியை அசைத்துவிட்ட சத்தமது என்றுமே சொன்னாரே இயல்பான தூதுவரும் அப்போது ராஜா அவர்களை அழையுமென்றார் தூதனும் ஓடிவந்து குடியானவரை துரிதாய் அழைத்து வந்தான் வந்த குடியானவர் ராஜாவை வணக்கமுடன் தெண்டனிட்டு வணங்கிப் பணிகள் செய்து அவர்கள் வணக்கமுடன் நிற்கையிலே அப்போது ராஜா அவர்களையும் தான்பார்த்து என்ன குறைச்சலாய் இங்கு வந்தீர் என்றாரே மேனாட்டு வேட்டுவர்கள் வெகுகூட்டம் தான்கூடி காகம்போலே கூடி கருங்களவு செய்தார்கள் ஆடுகொள்ளை மாடுகொள்ளை அவர் சூறையிட்டார்கள் நாங்கள் கொள்ளை கொடுத்து குடித்தனம் பண்ண முடியாமல் ராஜ சமூகம் அறிக்கை செய்ய வந்தோமென்றார் அப்போது ராஜா அவர்களையும் தான் பார்த்து இதுதானா உங்கள் குறை இன்னமுண்டோ சொல்லுமென்றார் குடியானபேர்கள் சொல்லுகிறார ரப்போது தலையூருக்காளி தான்வளர்க்கும் பன்றியது வரத்தால் பிறந்த பன்றி வெகு பலமுள்ள பன்றி எழுபதடிக்கொம்பன் எதிர்த்தாரை மார்பிளக்கும் | | |
|
|