வேப்பிலைக் கொம்பன் வெகுபலமுள்ள பன்றியது இந்த நல்ல பன்றியது எங்களுட சீமையிலே செந்நெல் கதிர்களெல்லாம் தின்றழித்துப் பன்றியது வாழை கரும்பு மஞ்சள் வகையான சோலையெல்லாம் அழித்துமே பன்றியது அதம்பண்ணி வருகுதய்யா என்று குடியானவர் இதமாகச் சொல்லியேதான் எங்கள் குறைகளை நீங்கள் இதமுடனே தீர்க்கவேணும் என்று பாதம் பணிந்தார்கள் பாங்கான பேர்களெல்லாம் சித்தம் திரும்பியேதான் ராஜா திருவாக்கு ஏது சொல்வார் எண்ணம் கலங்க வேண்டாம் யோசனைகள் செய்யவேண்டாம் வாளெடுத்த பேரை வரவழைத்துக் கூட்டிவந்து நம்மளுட சீமை மேல் காவல் ரட்சகனாய் வைக்கிறேன் நான் ஏதுக்கும் மலைக்கவேண்டாம் யோசனைகள் செய்யவேண்டாம் என்று முத்தான வாய்திறந்து (ராஜா) உத்தரவு செய்தாரே ஆடை அலங்கரித்து அவர்களுக்கு ஆபரணம் பூட்டியேதான் வேண்டும் வெகுமதிகள் மெத்தவே தான்கொடுத்தார் அப்போது குடியானவர் அடிவணங்கித் தெண்டனிட்டு வணங்கிப் பணிகள் செய்து வணக்கமுடன் நிற்கையிலே சித்தம் திரும்பி ராஜா திருவாக்குச் சொல்லுகிறார் ஏதுக்கும் அஞ்சவேண்டாம் யோசனைகள் செய்யவேண்டாம் உங்கள் ஊரு போய்ச் சேருமென்று உத்தரவு செய்தாரப்போ அப்பனைகள் செய்த பின்பு குடியானவர் எல்லோரும் வாரார்கள் அப்போ வாசல் பிரதானியை வரவழைத்து ஏதுசொல்வார் வாசல் பிரதானியை அழைத்து வரச் சொன்னது சொல்லுகிறாரப்போது சோதிமணிவாய்திறந்து மேற்கே மதுக்கரை நம்ம மேலான ராச்சியமும் | | |
|
|