கிழக்கேதான் தஞ்சாவூர் நம்ம சீமைகிளை பெருத்த நன்னாடு வடக்கேயும் காவேரி இது வளமான சீமையிலே தெற்கே மதுரை எல்லை இந்த திசையான சமூகமதில் காவல்மிக ஏற்றுக்கொண்ட கனமுடனே அவர்களுக்கு நாடு விடுகிறதும் அவர்களுக்கு நலமான சீமையுந்தான் உப்பளந் தருவதும் உடனே அவர்களுக்கு (என்னுட) வமிசம் உள்ளமட்டும் அவர்களை வைத்து நடத்துறதும் களத்தூரு கம்பரசம் அவர்களுக்கு காணியாட்சியாகத் தந்தேன் கல்லடித்துத் தாரதும் சாசனம் கடுகியே இப்போது வாரத்துக்குச் செலவு வகையுடனே சொல்லுகிறேன் மாம்பூண்டிக் குளமும் மானியம் விடுகிறது எனக்கு சரியான குலம் என்குலத்துக்கவன் குலமும் சரியான குலமானால் என் சற்குணமான பெண்ணை மூத்த குமாரத்தியை கல்யாணம் முடித்துத் தருகிறேன்நான் இந்தப்படிக்கு பிரதானி எழுதுமென்றார் உத்திரந்தான் சிவசோழ ராஜன் இந்தப்படி நான் தருவேன் என்றுசொல்லி கையொப்பமிட்டு பிரதானி கையில் கொடுத்தாரே வாசல் பிரதானியைப் பார்த்து வகையுடனே ஏது சொல்வார் மதுரை சீமையிலே வாளெடுத்து பேர்தேடி இருக்கும் இடம்பார்த்து அழைத்துவரச் சொன்னாரே அறிக்கை பெற்றுக் கொண்டு அவனப்போ குதிரைஏறி வாளெடுத்த பேர்தேடி வருகிறான் பிரதானி உய்யக்கொண்டான் குடமுருட்டி உயர்ந்தநெரி பதிகுதிரை சிக்கந்த மலை கடந்து திரு வடதேசம் உள்புகுந்து மானாமதுரை மட்டும் பிரதானி வாளெடுத்த பேர்தேடி வையகத்தில் வாரபோது வாளெடுத்தவரைக் காணோம் செட்டிகளும் தட்டாரும் சேர்ந்து வாழும் இடைக்குடியும் | | |
|
|