பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை295

பொன்னூஞ்சல் தொட்டியிலே நான் பொய்யுறக்கம் தூங்கையிலே
அனந்தல்வந்து கண்ணசந்து ஆதேசம் கண்டுவந்தேன்
கண்ட தெரிசனத்தை என் கண்கள் விழிகுளிர
மனதில் உதித்த கனா மறக்க முடியவில்லை
கண்டகனா சொல்வமென்று கடுகியே வந்தேனண்ணா!

கண்டகனா சொல்லுமம்மா காதுற்றுக் கேட்கிறேன் நான்
அந்த மொழிகள் சொல்ல உத்தமி ஆதேசம் சொல்லுகிறாள்
உறையூர்ப் பதியாளும் உத்தம மன்னர் சிவசோழர்
கரிசாட்டுப் பொன்னளக்கும் கரிகாலச் சோழனவன்
ஆள் உன்னைத்தேடி அலைந்துவரக் கண்டகனா*

வாசல் பிரதானி நம்ம மனைக்கு வரக்கண்ட கனா
சிவசோழர் குமாரர் உன்னைத்தேடி வரக்கண்ட கனா
சோழர் படைக்குத் தலைவர் பட்டாணி ராவுத்தர்மார்
பட்டாணி ராவுத்தர்மார் உன்னைப் பார்க்க வரக் கண்ட கனா
அந்த மொழிசொல்ல அண்ணர் அப்போது ஏதுசொல்வார்

என்ன இருக்கநீ ஏது மொழி சொன்னாயம்மா?
சிவசோழர் நம்மையறியார்! நாம் அவரைத்தான் தானறியோம்!
முன்னறியோம் பின்னறியோம்! முகத்தினை நாம் கண்டறிவோம்!
கடமை கொடுத்தறியோம் சிவசோழரை கண்டறிந்து வந்ததில்லை!
பத்திலொரு கடமை பகுதி கொடுத்ததில்லை!

ஆறிலொரு கடமை அரண்மனைக்கு மேல்வாரம்
கடமை கொடுக்காத காராளர் நம்மையுந்தான்
அவர்களைத் தேடி ஆள்வரவும் காரணமேன்?
நம்மை அவர் தேடி நாடிவரக் காரணமேன்?
*கண்ட(ன்) கனா மூக்கொலியுயிர்