சோழர் நாட்டு மணியமா? நல்ல துரைத்தனமும் நம்பளுதா? சீமை மணியமா சோழர் சீமையும் நம்மளுதா? என்ன இருக்கநீ என்ன கனா கண்டாயம்மா? அந்தமொழி சொல்ல உத்தமி அப்போது ஏது சொல்வாள் உத்தமியாள் கண்ட கனா ஒருநாளும் பொய்யாது பத்தினியாள் கண்டகனா பழுதொருநாள் போகாது காரிழையாள் கண்டகனா கைமேல் பலிக்குமண்ணா! கணக்கர் முதலிமார் அண்ணா காரியப்பேர் போலிருந்தால் செட்டிகளைப் போலிருந்தால் உங்கள் சேவகத்தைப் பார்ப்பாரோ சோழி சதுரங்கம் அண்ணா சொக்கட்டான் விளையாட்டு சொக்கட்டான் ஆட்டமது சில பேர்க்கு தொழிலில்லா ஆட்டமது சதுரங்க ஆட்டமது சண்டியர்கள் விளையாட்டு இது என்ன விளையாட்டு எழுந்திருங்கள் அண்ணாவே அந்தமொழி தங்கை சொல்ல அப்போ மனங்குளிர்ந்து ஆடுகிற சதுரங்கத்தை அப்புறமாய்த் தள்ளிவைத்து சோழி சதுரங்கத்தைத் தொட்டாட்டம் விட்டுவைத்து சதுரமணிப் பலகையைத் தான் தள்ளிவைத்து அப்புறமாய் விளையாட்டு விட்டுவைத்து விரைவாய் எழுந்திருந்து அரண்மனை உட்புகுந்து அண்ணர் ஆபரணப் பெட்டியெடுத்து ஆடை விரித்தெடுத்து அலங்காரமாய் வரிந்துகட்டி பொன்னுந் திருமேனியெல்லாம் பூட்டுகிறார் பொன் பனுதி பத்துவிரலுக்கும் பசும்பொன் கணையாழி எட்டு விரலுக்கும் இசைந்த கணையாழி கடதாரம் முடதாரம் அண்ணர் இருவரும் கண்டசரம் பூட்டுகிறார் மார்பில் நிறைந்ததொரு வைரமணித் தாவடமும் மாணிக்கம் பதித்ததொரு மார்பில் பதக்கம் மின்ன | | |
|
|