பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை297

பொந்திக் கடுக்கனிட்டு பொன்னெடுத்தும் பாகுகட்டி
தும்பி பதக்கமிட்டு துத்துத் துராய் மிகப்பதிந்து
தங்கத்தினாலிழைத்த சருகு நிசாரு தொட்டு
அள்ளிக் கயிறெடுத்து அலங்காரமாய்ப் பூட்டியேதான்
வண்ணக்கச்சை தானெடுத்து வகையாய் வரிந்துகட்டி

வகையாய் வரிந்துகட்டி வலப்புறம் சுங்கம்விட்டு பறக்கவிட்டு பாங்காகக் கச்சைகட்டி
எண்ணெய்க்கச்சை இடுப்பில்கட்டி இடதுபுறம் சுங்கம்விட்டு பட்டுக்குஞ்சம்
ஒட்டியாணம் பூட்டெடுத்து இடையில் பதித்து அப்போ
வாங்குபிடி சூரி வளைதடியும் சக்கரமும்
சுருட்டு முத்துப்பட்டா சூரவாள் கேடயமும்
ஈட்டிக் கோல் வல்லையமும் எரியீட்டி நேரிசமும்
சம்பு கத்தி சமுதாடு சமுக்குலா பட்டாவும்
பதினெட்டு ஆயுதமும் பாங்காய் வரிந்துகட்டி
பத்துக்கட்டி போட்டடித்த பாரமான கேடயமும்

பாரமான கேடயத்தை பாங்குடனே மேல்சூட்டி
எட்டுக்கட்டி போட்டடித்த இரணங்கண்ட மந்திரவாள்
இரணங்கண்ட மந்திரவாள் இதமாய் வரிந்துகட்டி
தூக்கும் பரிசையோட நிலம் தூத்துவரும் சல்லிகளும்
பதினெட்டு ஆயுதமும் அண்ணர் இருவரும் பாங்காகத் தானெடுத்து

அண்ணரிருவரும் அலங்காரமாய்ச்சிலம்பக்கூடம்
கரடிக்கூடந்தனில் கீர்த்திபெற இணைசிலம்பம்
பொதுகிறபோது பொன்னருமே சொல்லுகிறார்
 

அண்ணர் இருவரும் சிலம்பம்
பொருதி விளையாடுதல்
 

அடா வாள்வீரா தம்பிசங்கு நான் வார்த்தைசொல்லக் கேளுமடா
நாமே விடுதிவிட்டு நலமாகப் போறபோது