வேடுபடை பொருதி வினைப்போரு செய்வதுண்டு அன்று நீ வேடுபடை பொருதி வினைப்போரு செய்கிறதை படைப்போரு செய்கிறதைப் பார்த்துக் குதிரைவிட்டு வெகுசாய்ப் பரிந்து படைபொருதி படைப்போரு செய்கிறதை பாங்குகளை இன்றைக்கு பார்க்கவேண்டும் தம்பிசங்கு வெட்டுஞ் சவுரியத்தை நான் உன் வீரியங்கள் பார்க்கவேணும் என்றுமே அண்ணர் சொல்ல இயல்பான சங்கருந்தான் அண்ணா நீங்கள் பட்டம் பொறுத்ததுரை பாருலகு ஆண்டவர்கள் சிங்காதனம் பொறுத்து அண்ணா திருக்கொலுவு பெற்றவர்கள் வினைப்போரு செய்கிறதை வெகுவாகச் சொல்லுமுந்தான் வந்திடுமே என்று சொல்லி வகையாகச் சங்கருந்தான் ஒருநாளும் சொல்லாத வார்த்தை ஒருசொல் பிறந்திட்டாலும அந்தச்சொல் பொறுப்பேனென்று உத்திரவு செய்தாயானால் வேடுபடை பொருதுகிற வினைப்போரு செய்வேனண்ணா! என்று தம்பிசங்கர் சொல்ல ஏது சொல்வாரந்நேரம் வினைப்போரு செய்யும்போது என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வேன் உன்னை தம்பியென்றும் பார்க்கவில்லை என்னை நீ தமையனென்றும் பார்க்க வேண்டாம் என்று பொன்னம்பலசுவாமி போர்செய்ய வாராரிப்போ மந்திரவாள் தும்புவிட்டு அண்ணர் வருகிறார் அப்போது தன்னுட மெல்லியவாள் தும்புவிட்டு விரசுடனே பின்வாங்கி கண்கள் சிவந்து சங்கர் கடுங்கோபமாகியேதான் நீலவிழிக் கண்களிரண்டும் சங்கருக்கு நெருப்புத் தணலாகிறது வலதுபுறம் மீசையது வல்லதாய்ப்போர் செய்கிறது | | |
|
|