இடதுபுறம் மீசையது ஈட்டியது போர் செய்கிறது அண்ணரைப் பார்த்து சங்கர் அப்போது ஏதுசொல்வார் அடா ஒருநாளும் சொல்லா ஒருவார்த்தை சொன்னதற்கு என்னுடைய வாளாலே உன்னை இருதுண்டாய் வீசிடுவேன் என்று ஆக்கரித்து குலவையிட்டு அறுபதடி பின்குதித்து வட்டமிட்டு பவனிகொண்டு மந்திரவாள் தான்சுழற்றி மந்திரவாள் தான்சுழற்றி வாகுடனே வீசுகிறார் பொன்னர் மெல்லியவாள் வீச்சுதட்டி விலகிக் குதித்துமப்போ தம்பிசங்கு உக்கிரமாம் வீச்சையெல்லாம் கேடயத்திலே தடுத்து அப்போ ஆக்கரித்து குலவையிட்டு பொன்னர் அறுபதடிபின் குதித்து வட்டமிட்டு பவனிகொண்டு மந்திரவாள் சுழற்றிவந்து வாகுடனே வீசுகிறார் பொன்னர் வாள்வீரர் குமாரசங்கை பொன்னர் வீசின வீச்சையெல்லாம் சங்கர் கேடயத்திலே தடுத்து இவர்கள் இருவரெண்டுபேரும் வெட்டுறதும் சுட்டுறதும் வினைப்போரு செய்கையிலே வீரவாள் வீசும் சத்தம் கோடையிடி இடித்தாற்போல கிடுகிடென்று குமுறுது மந்திரவாள் வீச்சு மழை மின்னல் ஜோதியைப்போல் இப்படியாக இவர்கள் போர் செய்கையிலே நீ சரிக்குச் சரியானாய்! சரியான பேரானாய்! உன் சமத்தைக் கண்டு தம்பி சந்தோஷமானேனடா! பொன்னருக்கு ஒருபுஜம் இருபுஜமாய் திரேகமெல்லாம் பூரித்து வாராய் இளவரசே வாள்வீரா தம்பிசங்கு வெற்றி மதயானை வீரியனே தம்பிசங்கு எனக்கு சரிக்குச் சரியானாய் சரியான பேரானாய் | | |
|
|