எனக்கு எதிர்த்து துரையானாய் ஈடான பேரானாய் நானிருக்கும் சிங்காதனம் தானிருக்க வைப்பேன்நான் அந்த மொழிகள் சொல்லி அழைத்தாரே மைத்துனரை எதிரில்லாப் பெருமாளைப் பார்த்து ஏதுசொல்வார் நல்ல பொன்னர் சரிக்குச் சரியானான் என்தம்பி சரியான பேரானான் நானிருக்கும் சிங்காதனம் தம்பியைத் தானிருக்க வைக்கவேணும் அத்தைபிள்ளை மைத்துனரை ஆலோசனை கேட்கும்போது எதிரில்லாப் பெருமாள் ஏதுசொல்வார் மைத்துனர்க்கு வாருங்காண் மைத்துனரே ஒருவார்த்தை சொல்லக் கேளுமினி உங்கள் தங்கை பின்னாலே வருகிறதை முன்னாலே சொல்கிறவள் ஆதிநாளையில் வருகிறதை அடி நாளே சொல்கிறவள்! நமக்கு மாதா குருவல்லவா? மந்திரியும் இவளல்லவா? நமக்கு தாதா குருவல்லவா? தங்கை தவமணியைக் கேளுமினி அவளை அழைத்துநீர் ஆலோசனை கேளுமென்றார் அந்தமொழி சொல்ல பொன்னர் அழைத்தாரே தங்கையரை உத்தமியைத் தானழைத்து ஏதுசொல்வார் அந்நேரம் எனக்குச் சரிக்குசரியானான் தம்பி சரியான பேரானான் எனக்கு எதிர்த்த துரையானான் தம்பி ஈடான பேரானான் நானிருக்கும் சிங்காதனம் தம்பியைத் தானிருக்க வைக்கவேணும் உன்முத்தான வாய்திறந்து உத்தரவு சொல்லுமம்மா அந்த மொழிகேட்டு உத்தமி அப்போது ஏதுசொல்வாள் பட்டம் பொறுக்கும் சின்னண்ணருக்கு பாராக்கொலு ஏற்றிருக்கும் சிங்காதனம் பொறுக்கும் திருக்கொலு யேற்றிருக்கும் | | |
|
|