பட்டம் சூடி சின்னண்ணருக்கு பருமுத்தால் அலங்கரிப்பீர்! என்று முத்தான வாய்திறந்து தங்கை உத்தரவு செய்தபின்பு வெற்றிமன்னன் பறைநகுலன் வீரபாகு சாம்புவனை அவனை அழைத்து பொன்னர் அப்போது ஏதுசொல்வார் சின்னாண்டவர்க்கு பட்டம் பொறுதுமிப்போ பாராக்கொலு வைக்கவேணும் சிங்காதனம் பொறுத்து திருக்கொலுவில் வைக்கவேணும் ஆனைபடை சேனைதளம் அத்தனையும் கூட்டமிட நம்ம சித்தாலைப் பட்டணம் தெருக்கள் தோறும் சுற்றிவந்து வெற்றிக்கொம்புதான் பிடித்து வெங்கலபடைமுரசு தான்முழக்கி ஆனைபடை சேனைபடை அத்தனையும் கூட்டுமிப்போ முத்தான வாய்திறந்து பொன்னர் உத்தரவு செய்தபின்பு சித்தாலைப் பட்டணங்கள் வீரபாகு தெருக்கள்தோறும் சுத்திவந்து சங்கருக்குப் பட்டம் பொறுக்குதிப்போ பாராக்கொலு வீற்றிருக்க ஆனைபடை சேனைதளம் அத்தனையும் கூட்டமிப்போ அடித்தான் கடிங்காளை வீரபாகு பிடித்தானே வெற்றிக்கொம்பு படைமுரசு சத்தங்கேட்டு படைமன்னர் கூட்டமிட்டார் போட்டமண்டி வாங்காத பொருந்தினியர் கூட்டமிட்டார் வைத்த மண்டி வாங்காத மாருவாசைக்காரரும் படைக்குத் தலைவர் பட்டாணி ராவுத்தமார் வெள்ளித்தடிக்காரர் விருதுமன்னர் கூட்டமிட்டார் ஆரிய ராவுத்தாமர் ஆனைப்படை சேனைதளம் கூட்டுகிறார் குமாரதளம் குமாரதளம் கூட்டமிட்டு அரண்மனை வாசல்தனை அப்போது அலங்கரித்து தோரணங்கள் கட்டி துலங்க அலங்கரித்து கண்ணாடி தூக்கம் கட்டி அலங்கரித்து | | |
|
|