பக்கம் எண் :

302அண்ணன்மார் சுவாமி கதை

பட்டமும் சூடி சங்கருக்கு பருமுத்தால் அலங்கரித்து
ஏகாந்த கொலுவிலேதான் சங்கரை யிருமென்று சொன்னாரப்போ
அந்த மொழிகள் சொல்ல அண்ணர் கூடஅப்போ கொலுவிருந்தார்
கட்டியங்கள் கூற கவிவாணர் முன்படிக்க
வெள்ளித்தடிக்காரர் விருதுமன்னர் சூழ்ந்து நிற்க

போட்டமண்டி வாங்காத பொந்தினியர் சூழ்ந்துநிற்க
நல்லெழுத்தும் தம்பட்டம் நாகசுரம் பேரிகையும்
கொட்டும் கிடுமுடியும் கோவில் மேள தாளங்களும்
இப்படி சந்தோஷமாக யிருக்குமந்த வேளையிலே
 
                     பிரதானி வளநாடு வருதல்
 
வாசல் பிரதானியவர் வாளெடுத்த பேர்தேடி
வாளெடுத்த பேர்தேடி வருகிறார் அந்நேரம்
மதுரை குளக்காடு வாகனம் மாமதுரை எல்லைவிட்டு
இவர்கள் ரெண்டுபேரும் இனிச்சிலம்பம் பொருந்தினது
பரிசையோடு பரிசைபட்டு உரசினது பாரிடிபோல் முழங்கையிலே

கோடையிடி யிடித்தாற்போல் குதிரைக்கு தான்கேட்டு
வாசலான் புரவி வருகுதே செவியடைத்து
மந்திரவாள் வீசினது புரவிக்கு மனமே வெறிதாக்க
புரவிக்குக் கண்ணு வெறியேறிக் கால்கள் விறுவிறுத்து
அறிக்கையுள்ள புரவியென்று அசையாமல் நிற்கிறதை

(பிரதானி) ஏறின குதிரைவிட்டு இறங்கியே தானும்வந்து
முன்வாகை தான்பிடித்து முன்னாகத் தானிழுத்தான்
குதிரை முன்னும் அசையவில்லை பின்னும் நகரவில்லை
அடிமேல் அடியடித்தும் குதிரை அசையவில்லை அப்போது
எண்ணாதுயெண்ணி பிரதானி ஏங்கி மனங்கலங்கி
நடுவனத்தில் குதிரையைவிட்டு நானொருவன் போகிறதா?