பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை303

இது கள்ளர்பெருத்த சீமை கருவேலா முள்காடு
என்று கண்ணீர் சொரிந்து குதிரையைக் கட்டிப்பிடித்தான்
கண்ணோடிணைத்துக் கட்டிப் புலம்புகிறான்
புலம்புகிறபோது பொன்னருட பண்ணையாள்
மாடுமேய்க்கும் சிறுவர் வாராரே மாடோட்டி

மாடுகளையோட்டி சிறுவர் மகுடிக் குழலூதி
மகுடிக் குழலூதிக் கொண்டு வனத்தில் வருகையிலே
கண்டானே பிரதானி கானகத்தில் சிறுவர்களை
மாடுமேய்க்கும் சிறுவர்களே வாருங்களென்று அழைத்து
மேகங்கள் கட்டாமல் உங்கள் சீமையில் மின்னலும் மின்னுவதேன்?

கோடையிடி யிடித்தாற்போல் குமுறுதே மேகமெல்லாம்
என்றுமே பிரதானி கேட்க ஏதுசொல்வார் சிறுவர்களும்
எங்கள் சித்தாலைப் பட்டணத்தில் சீரான பொன்னர் சங்கர்
சிலம்பம் பொருந்துறதும் சேல்போல பாய்கிறதும்
வாள் வீச்சின சோதியது வானமது மின்னினாற் போல்

கோடையிடு யிடித்தாற்போல் எங்கள் குமர சங்கு வீசுவது
மந்திரவாள் வீசுவது ஜோதிமின்னல் மின்னினாற் போல்
துலங்குமென்று சிறுவர்களும் சொன்னார்களப்போது
வாசல் பிரதானி வகையாக ஏதுசொல்வார்
உங்களாண்டவர் அரண்மனைக்கு அடையாளம் சொல்லுமென்றார்

நாங்கள் அடையாளம் சொன்னாலும் வேட்டைநாய் உம்மை அண்டவிடாதென்றான்
அந்தமொழி கேட்டு பிரதானி அப்போது ஏதுசொல்வார்
அப்புறமே நின்று நீங்கள் எனக்கு அறியவே சொல்லிடுங்கள்
ஆடை விரித்தெடுத்து சிறுவர்கள் அலங்காரம் வரிந்துகட்டி
வாருமினித் தம்பியரே என்று வரவழைக்கும் வேளையிலே