பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை305

வண்ணச் சுருளெடுத்து சிவசோழர் வாசகத்தை முன்னேவைத்தான்
ஓலைச்சுருளெடுத்து சிவசோழர் உத்திரத்தைப் பார்த்துமப்போ
இன்பம் குளிர்ந்து பொன்னர் இருதோளும் பூரித்து
தன் மனத்துக்குள்ளே தானே மகிழ்ந்திடுவார்
அப்போ குமரசங்கு அண்ணரையும் தான்பார்த்து

ஓலைச்சுருள் வாசகத்தை உள்ளபடி சொல் எனக்கு
இன்றேல் ஓலைகொண்டுவந்தவனை ஒரேவெட்டில் வெட்டிடுவேன்
அந்த மொழிகள் சொல்ல அண்ணர் அப்போது ஏதுசொல்வார்
சோழர் வாசல் பிரதானியை சொல்லாதே இவ்வார்த்தை
ஓலைக்குள் வாசகத்தை உள்ளபடி சொல்கிறேன்

அடா வாள்வீரா தம்பிசங்கு வகையாக இப்போது
சிவசோழர் உத்தரவும் சீக்கிரமாய் எழுதியதை
உனக்கு நான் சொல்லுகிறேன் உண்மையுடன் தம்பியரே
மேற்கே மதுக்கரை சிவசோழர்சீமை மேலான ராச்சியமும்
கிழக்கேயும் தஞ்சாவூர் கிழக்கோட்டை வாசல்மட்டும்

வடக்கேயும் எல்லை வளமிகுந்த காவேரி
தெற்கே மதுரையெல்லை இந்தத் திசை நான்கு சமூகமதில்
காவல்கொண்ட பேர்களுக்கு கடுகியே இப்போது
நாடுவிடுகிறதும் நாலுசீமை பணம் தருகிறதும்
உப்பளம் தருகிறதும் உடனேயவர்களுக்கு

வாரத்துக்கு செலவு மாம்பூண்டிகுளம் வகையாய் விடுகிறதும்
களத்தூரு கம்பரசம் காணியாச்சி பதிவு கல்லடித்துப்போடுறதும்
சிவசோழர் வமிசம் உள்ளமட்டும் வைத்து நடத்துறது