பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை307

அந்தமொழி கேட்டு உத்தமி அழைத்தாளே தாதிகளை
அழகு முழிராமி அபிராமி வாருமிங்கே
திரண்ட முழியாளே திருவே நீ வாருமினி
தாதியரைத் தானழைத்து உத்தமி தானுமப்போ ஏதுசொல்வார்
ஈர்க்குச் சம்பா அரிசியதை இணை இணையாய்த் தீட்டியேதான்

துஞ்சா அமுது செய்யுமென்று சொன்னாளே பத்தினியாள்
அந்த மொழிகேட்டு தாதியர்கள் அதிதுரிதாய் ஓடிவந்து
போசனங்கள் தானும் பொரி கறியும் தான்சமைத்து
பதினாறு வகைக் கறிகள் பாங்குடனே தான்சமைத்து
பேடைமயில் பிள்ளை ஆண்டாள் பிரதானி அழைத்துவந்து

நல்லெண்ணெய் சீயக்காய் நன்றாய் நலுக்கமிட்டு
கொப்பறையில் நீர்வைத்து கோந்தை முழுக்காட்டி
பன்னீருச் செம்பிலேதான் புதுநீருந் தான்சொரிந்து
முழுகித் தலையாத்தி முற்றத்தில் வந்துநின்று
பச்சைவெட்டும் சந்தனமும் பாரமத்த குங்குமமும்

வெண்கலக் குளிகைரொம்ப அதை மெத்திச்சு தான்குழைத்து
திருமுடி சென்னியிலே திலகப் பொட்டுத் தானும்வைத்து
சாத்துகிறார் சந்தனத்தை பிரதானி தன்னுடைய திரேகமெல்லாம்
வந்து அரண்மனையில் வகையாகத் தானிருந்தான்
தாதிமாரோடி வந்து தலைவாழையிலை யெடுத்து

குலை வாழையிலை எடுத்து பிரதானிக்கு குறுக்காக முன்போட்டு
கரகம் பிடித்துமப்போ கைக்கு நீர்தான் வார்த்து
பிரம்புப் பெட்டிக்கூடையிலே போசனமுந்தானெடுத்து
குத்துப்பருப்புமிட்டு குடத்தோட நெய் சொரிந்து
பதினாறு வகைக் கறிகள் பாங்குடனே முன்னே வைத்து