உத்தமியாள் நல்லதங்கை ஏது சொல்வாள் அந்நேரம் நாங்கள் பட்டிக்காட்டு குடியானவர் எங்களுக்கு பல கறியும் சிக்காது ஐந்தாறு கறி நினைத்து அண்ணா உண்ணுமினிச் சாதமென்று அந்த மொழிகள் சொல்லி பிரதானி அப்போது ஏது சொல்வான் இருவருடன் பிறந்தவளுக்கு நீ எனக்கு மூவருடன் பிறப்பு ஒக்கப் பிறந்தவர்க்கு உபசரிப்புதானு மென்ன உண்டு எழுந்தார் சிவசோழர் உத்தமன்னன் பிரதானி கரகம் பிடித்து தாதி கைக்கு நீர் தான்வார்த்து வெற்றிலை விடாக்காயும் மெத்த வாரித் தான் கொடுத்து சந்தோஷமாக பிரதானி தான் வந்தார் அந்நேரம் வாசல் பிரதானியை பொன்னர் வரவழைத்து ஏதுசொல்வார் எங்கள் கிட்ட வந்தது நீர் எனக்கறியச் சொல்லுமென்றார் அந்த மொழி கேட்க பிரதானி அப்போது ஏது சொல்வார் ஐயர் திருப்பணிக்கும் ரெத்னாசலமூர்த்தி அபிஷேகக் கட்டளைக்கும் கோவில் கிராமத்தை கொள்ளையிட்டார் வேட்டுவர்கள் அந்தக்குடியானவர்கள் அனைவரும் கூட்டமிட்டு சிவசோழ ராஜாவுட சமூகம் வந்துதான் பணிந்து கொள்ளை கொடுத்து நாங்கள் குடித்தனம் பண்ணமாட்டோம் பிடித்தமாடு எடுத்தகொள்ளை வேட்டுவர் அவசூறை கொள்ளை செய்தார் அவதூறு சொல்லியேதான் ராஜாசமூகம் அடிவணங்கி நிற்கையிலே சித்தம் திரும்பி ராஜா திருவாக்கு செய்தாரே களவை அடக்கியேதான் கட்டுப்பண்ணி தாரேனென்று உத்தரவுசெய்துமப்போ அவர்களை ஊருக்கனுப்பிவைத்து இந்தநல்ல உத்தரவை எழுதி என்கையில் கொடுத்தார் | | |
|
|