வாளெடுத்துபேரை நீ வரவழைத்துக் கொண்டுவர எங்களுட ராஜா எனக்கு உத்தரவு செய்தபின்பு வாளெடுத்த பேர்தேடி வையகத்தில் வந்தேனான் வையகமெல்லாம் பார்த்தேன் வாளெடுத்த பேர்காணேன் உங்களைத் தானழைத்து இனிக்கூட்டிப் போகவென்று அரண்மனை திசைபார்த்து அடியேனான் வந்தேனிப்போ அந்த மொழிகேட்டு பொன்னர் அப்போது ஏதுசொல்வார் |
பொன்னர் பிரதானியை அனுப்புதல் |
உன்னைச் சரிக்குச் சரியாயெண்ணி பிரதானி உன்பிறகேவாரதில்லை சோழர் வந்தால் நான் வருவேன் அவர் குமாரர் வந்தால் நான் வருவேன் உன்பிறகே வாரதில்லை இனி நடடா உன்னூரே அந்த மொழிகேட்டு பிரதானி அப்போது ஏதுசொல்வார் ஒருவன் வழி போகலாமா? சுவாமி உற்றாளாய்* நீங்களனுப்பும் அந்த மொழி சொல்ல பொன்னர் அப்போது ஏதுசொல்வார் ஏதுக்கும் மலைக்காதே பிரதானி யோசனைகள் செய்யாதே என்பேரு சொல்லியடா இருகையிலும் பொன்னேந்தி பொன்னருட பேருசொல்லி போடா நீ உன்னூரே உன் குதிரை மீதேறி இனி நடடா உன்னூரே அந்த மொழிகள் சொல்ல பிரதானி அப்போ பராக்கென்று அங்குவடி மிதித்து அப்புரவி மீதேறி உறையூர் திசைநாடி பிரதானி உத்தமனும் தானடைந்தான் அப்போ சிவசோழர் ஆடல் பாடல் சங்கீதம் கேளிக்கை முகமாக சிவசோழர் கொலுவிருக்கும் வேளையிலே * ஒற்றை ஆளாய் |