பக்கம் எண் :

310அண்ணன்மார் சுவாமி கதை

அப்போது பிரதானி ராஜாவுட அரண்மனைக்கு வந்திறங்கி
ஏழுகளரியிலே இங்கே இணைகளரி உள்புகுந்து
சுவாமி பராக்கென்று சரணம் பணிந்துநிற்க
ஆடல் பாடல் களரியைத்தான் அப்போது கையமர்த்தி
வாளெடுத்த பேர்தேடி வையகத்தில் போனாயே?

வாளெடுத்த சேவகரை நீ வரவழைத்து வந்தாயோ?
அந்தமொழி கேட்ட பிரதானி அப்போது ஏதுசொல்வார்
சுத்தாத தேசமில்லை சாமி நான் தொடராத சீமையில்லை
வாளெடுத்த பேரொருவர் வையகத்தில் தானுமில்லை
வளநாடு பட்டணத்தில் வாளெடுத்த சேவகர்தான்

பொன்னரென்றும் சங்கரென்றும் புகழ்பெரிய காராளர்
வார்த்தைக்கோ வேளாளர் மந்திர வாளுக்கோ மிகசமர்த்தர்
பொறுமைக்கோ வேளாளர் படை போருக்கோ வாள்சமர்த்தர்
இருவரெண்டு பேரும் இலங்கை சிறு புலிதான்
வாருமையா வென்று சொல்லி வரக்கேட்டேன் நானுமினி

உன்னை சரியா யெண்ணி நான் உன்பிறகே வாரதில்லை
சோழர் வந்தால் நான் வருவேன் சோழர் குமாரர் வந்தால் நான் வருவேன்
உன் பிறகே வாரதில்லை என்று உறுதியாயச் சொல்லிவிட்டார்
வாரதில்லை யென்று வலுக்காரம் பேசுகிறார்
அந்த மொழிசொல்ல சிவசோழர் அப்போது சொல்லுகிறார்

வாரும் பிரதானியரே ஒரு வார்த்தை சொல்லக் கேளுமினி
ஆனால் அவர்களுந்தான் அந்த வார்த்தை சொன்னபோதே
வலுக்காரர் தானாக வகையாயிருப்பார்கள்
அதற்குமே குற்றமில்லை அடவாய் வரச்சொன்னதுதான்
வெள்ளாளன் ஆனதினால் விரசாக இப்போது
நமக்குச்சரியாக நாமளுமே போய் அவரை