பக்கம் எண் :

312அண்ணன்மார் சுவாமி கதை

என்ன இருக்க நீ என்ன மொழி சொன்னீரய்யா
அவர் கள்ளர் படையுமல்ல கருமறத்தாருமல்ல
மன்னர் படையுமல்ல மறுமன்னர் தானுமல்ல
ஏழை வெள்ளாளன் பயலை எனைப்போயழைத்துவர
சொல்கிறது ஞாயமல்ல சுவாமி மகாராஜா

என்று குமாரன் சொல்ல ஏது சொல்வார் ராஜாவும்
கள்ளர் படையுமவர் கருமறத்தாரும் அவர்
அவரை அழைக்க நீயேதான் போகிறாயா நானேதான் போகட்டுமா
என்றுமே ராஜர் சொல்ல ஏது சொல்வார் குமாரனவர்
 
புள்ளி சிவசோழர் வளநாடு வருதல்
 
நான் போய் அழைத்துக்கொண்டு நலமுடனே தான்வருவேன்
அப்போது சோழராஜர் அவர் மகனைத் தான் பார்த்து
அறிக்கையுள்ள புரவி அதனைப்பிடித்து வந்து
நாலுகால் வெண்மை நடையில் அலங்காரம்
அலங்காரம் தானும் செய்து அதன் மேலே சீனிவைத்து

கல்லணையும் கட்டியேதான் கடிவாளமே பூட்டி
சிவசோழ ராஜா புரவிக்கு திருமந்திரம் ஜெபித்து
என் மகனைக் கொண்டு நீ எகிறிக் குதிக்காதே
கடலைக்குதியாதே கருமலையைத் தாண்டாதே
விண்ணைக் கடவாதே என்மகனைக்கொண்டு வேகமாய்ப்பறக்காதே

பொறுமைய தாகவேதான் பொன்னரிடம் நீயும்போய்
திரும்பி வா வென்று குதிரை செவியிலே தானுஞ்சொல்லி
கட்டமுது கட்டி வைத்து குமாரனை கடுகி அனுப்பிவைத்தார்
வளநாடு திசை நாடி புரவி வருகுதே பாய்ந்துமப்போ
கோநாடு திசை நாடி புரவி வருகிறதே அப்போது
போதாவூர் வழியாக சோழர் புரவி வருகையிலே