பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை313

போதாவூர் குளத்தடியில் சோழர் புரவியை விட்டிறங்கி
அமுது எடுத்துண்டு சோழர் அப்போது பசியாறி
வளநாடு போயறிய இனிமேல் வெகுநேரம் செல்லுமென்று
வந்தவழிபார்த்து குதிரையை மார்மூண்டு திருப்புகிறார்
 

புள்ளி சிறு சோழராஜன் திரும்பிப் போகிறதை தங்கை
சொப்பனங்கண்டு அண்ணரிடம் சொல்லுதல்
 

அன்னலூஞ்சல் மேடையிலே அனந்தல் செய்யும் வேளையிலே
கண்டாளே சொப்பனங்கள் காரிழையாள் நல்லதங்கம்
ஆதேசங் கண்டுமப்போ அண்ணர்பக்கம் ஓடிவந்து
என்னவென்று சொல்லுகிறாள் இளங்கொடியாள் உத்தமியும்
வளநாடு திசை நாடி வந்ததொரு சோழர் மகன்

வளநாடு போயடைய இன்னும் வெகுநேரேஞ் செல்லுமென்று
வந்தசிறு சோழர் மகன் அண்ணா மார்மூண்டு போறானே
மார்மூண்டு போறவனை அண்ணா வரவழைத்து வாருங்கள்
அந்தமொழி சொல்ல அண்ணர் அப்போ எழுந்திருந்து
காரியினா நிலாவை கவர்மாரிக்* கொண்டுவந்து

காலாலே தட்டியேதான் பொன்னர் ஆலாப்போலே பறந்து
ஆலாப்போலே பறந்து குதிரை அதனிடத்தில் ஓடிவந்து
வளநாடு திசைநாடி நீ வந்ததொரு சிறுசோழர்
வந்தசிறு சோழர் நீர் மார்மூண்டு போறதென்ன
வாகையைத் தான்பிடித்து குதிரையை மல்லாக்காய் தானிழுத்தார்

அப்போ சிறு சோழருக்கு அதிகோபமாகியேதான்
ஆருடைய சேவகநீ குதிரையை அஞ்சாமல் வாகை தொட்டாய்
*கயிறு மாறி