பக்கம் எண் :

314அண்ணன்மார் சுவாமி கதை

எவருடைய சேகவநீ எண்ணாமல் வாகை தொட்டாய்
வாகை தொட்ட கையின் மணிக்கட்டை நான் தரிப்பேன்
மெல்லியவாள் தும்புவிட்டு சோழர் மகன் வெட்டுவேனென்று சொல்லி
வெட்டுகிறேன் என்று சொல்ல பொன்னர் வெகுண்டுமப்போ ஏதுசொல்வார்
வாருமையா ராஜாவே வலுக்காரம் பேசாதீர்

வெட்டுகிறேன் என்று சொல்லி வீரியங்கள் பேசுகிறீர்
புரவி புரவியென்று வெகு பிரபலமாய்ப் பேசுகிறீர்
கடலைக் குதித்திடுமா உன்புரவி கருமலையைத் தாண்டிடுமா
விண்ணைக் குதிக்குமா உன்னைக் கொண்டு வேகமாய்ப் பறந்திடுமா?
புரவி புரவியென்று புகழ்ந்து நீ பேசுகிறாய்

அந்த மொழிகள் சொல்ல சோழர்மகன் அப்போது ஏது சொல்வார்
உத்தமா தேசிமுன்னே நீ ஓட நல்ல சேவகனா?
கட்டுங் குதிரை முன்னே கடிவாளம் போடுவீரோ?
அந்தமொழிகள் சொல்ல பொன்னர் அப்போது ஏதுசொல்வார்
உன் குதிரை முன்னே நாம் ஓடுகிறதானாக்கால்

உன்கட்டுக் குதிரை முன்னே நான் காலாலும் ஓடுவேனே
எனக்கு என்ன வெகுமதிகள் ஏது செய்வாயிப்போது
அந்த மொழிகள் சொல்ல சோழர் மகன் அப்போது ஏது சொல்வான்
செய்யும் வெகுமதி தான் சொல்லுகிறேன் கேளுமினி
என்குதிரை பெற்றவிலை ஆயிரம்பொன் பூண்டபணி ஆயிரம்பொன்

இரண்டாயிரம் பொன்பெற்ற புரவி நான்கொடுக்கத் தப்பாது
உத்தமா தேசி முன்னே நீர் ஓடாதே போனாக்கால்