இந்த இரண்டாயிரம் பொன்னும் நீர் கொடுக்க வேணுமிப்போ இதுவே சபதமாய் வேறே சபதம் இல்லையினி அந்தமொழி சொல்ல பொன்னர் அப்போது ஏது சொல்வார் நீர் சொன்ன சபதமது சொல் தப்பினால் நானும் விடேன் இப்படி பொன்னர் சொல்ல ஏது சொல்வார் சோழர் மகன் இந்தச் சபதம் தப்பினால் உன்னையினி நானும் விடேன் இவர்கள் ரெண்டுபேரும் அப்போ இதுசபதம் சம்மதித்து எதுமட்டும் ஓடுவதென்று சிறு சோழர் கேட்கையிலே அந்தமொழி சொல்ல பொன்னர் அப்போது ஏதுசொல்வார் வாருமையா ராஜாவே வார்த்தை சொல்ல நீர்கேளும் போதாவூர் குளத்தடியில் கட்டமுது உண்டீரே இருந்தமுது உண்ட இடத்தில் என்ன மரங்கள் கண்டுவந்தீர்? நான் கட்டுச்சோறு உண்ட இடத்தில் கண்டதொரு மரந்தான் வன்னிமரம் வாழைமரம் வழியிலே நான் கண்டு வந்தேன் அந்த மொழி சொல்ல பொன்னர் அப்போது ஏதுசொல்வார் நீயே முந்தினால் வன்னி மரத்தில் குங்குமப் பொட்டிட்டு அங்கே இருப்போரை சாட்சிவைத்து நீர் திரும்பும் நானே முந்தினால் வாழை மரத்தில் சந்தனப் பொட்டிட்டு அங்கிருக்கும் பேர்களையும் சாட்சிவைத்து நான் வருவேன் இருவரும் சம்மதித்து இனி ஓடுவோம் என்று சொல்லி சோழர் குமாரன் சொல்லுகிறான் பொன்னருக்கு அறுபதடி பின்னே நின்றுஓட அப்பனைகள் செய்தேனினி அந்த மொழி சொல்ல பொன்னர் அப்போது சொல்கிறார் அறுபதடி விட்டீரானால் என் அடப்பக் காரன் ஓடிடுவான் முப்பதடி விட்டீரானால் என் மூளிநாய் வளர்க்கும்பயல் ஓடிடுவான் அந்த மொழிகள் சொல்ல பொன்னர் அப்போது ஏதுசொல்வார் | | |
|
|