பக்கம் எண் :

316அண்ணன்மார் சுவாமி கதை

அப்படி அடிவிட்டு ஓடச் சொன்னால் ஆருக்கும் ஏற்காது
உன் குதிரை முன்தாவி ஒரு காலும் பின்தாவி ஒருகாலும்
சரியாக நின்றிடுவோம் சமர்த்து மேல் ஓடிடுவோம்
முன்காலொருகாலும் பின்காலொருகாலும்
முன்தட்டு ஒருகையிலே குதிரை பின்தட்டு ஒரு கையிலே

சரியாக நின்றுமப்போ சோழரைத்தான் ஓடும் என்று சொன்னார்
பட்டாணிச் சாவுக்கெடுத்து சோழர்விட்டார் புரவியைத்தான்
காலாலே தட்டிவிட்டார் பொன்னர் ஆலப்போலே பறந்து
ஆலாப்போலே பறந்து அதிதுருசாய் ஓடிவந்து
வாழை மரத்திலேதான் வகையான பொட்டுமிட்டு

அங்கிருக்கும் பேர்களைத்தான் அனைவரையும் சாட்சிவைத்து
எதிராக வந்து நின்று சோழரைப்பார்த்து ஏதுசொல்வார் பொன்னருமே
உன் உத்தமாதேசி வர இந்நேரம் சோலி என்ன
கட்டை தடுக்கியதோ கல்லணை சரிந்திட்டதோ
முட்டி தடுக்கியதோ உன் குதிரைக்கு முன்வாகை அந்திடுச்சோ

இடறி விழுந்திட்டதோ உன் குதிரை இளமணலில் பாய்ந்திட்டதோ
உன்குதிரை வருவதற்கே இன்னேரம் சோலி என்ன
அந்த மொழி சொல்ல ராஜகுமாரன் அப்போது ஏது சொல்வார்
வாருமினி நல்ல பொன்னு உன் வார்த்தைக்கு நான் என்ன சொல்வேன்?
மேகம் பறந்தாலும் வெகு தூரம் நான் பறப்பேன்
காகம் பறந்தாலும் கருதியே நான் பறப்பேன்
காகத்திலுங்கடுசு உன்னைக் கண்ணாலே காண்கிலையே