பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை317

நீநின்றது கண்டேன் நான் உன் வார்த்தையது கேட்டேன் நான்
அப்போது கண்டதல்லால் நீ போன அரவந்தெரியவில்லை
என்புரவி விலை ஆயிரம் பொன் பூண்டபணி ஆயிரம்பொன்
விளையாட்டுப் போலே என் குதிரை என்னாத் தெய்வப்புரவி
ஏறின குதிரை விட்டு இறங்குகிற வேளையிலே

வாருமையா ராஜாவே உனக்கு வார்த்தை நான் சொல்லுகிறேன்
நீங்கள் பட்டம் பொறுத்த துரை பாருலகம் ஆண்டவர்கள்
சிங்காதனம் பொறுத்த திருக்கொலுவு பெற்றவர்கள்
ஏறின குதிரை விட்டு இறங்குவது ஞாயமில்லை
நான் கொடுத்த குதிரையாகக் கூடவே வாருமினி

வாருமையா ராஜா என்று வரவழைத்து வாரபோது
வாள் வீரன் குமாரசங்கு வாரார் எதிராக
சோழர் குதிரை ஏறி வருகிறதை குமாரசங்கு தான்பார்த்து
அண்ணரைத்தான் பார்த்து சங்கர் அப்போது சொல்லுகிறார்
வெற்றிக்கொண்டார் யாருமிப்போ அண்ணா தோல்வியாய் போனது யார்
என்று சங்கர் தான்கேட்க ஏதுசொல்வார் அண்ணருமே
வெற்றியோ சோழரது தோல்வியா நம்முடது
அண்ணருஞ் சொல்லையிலே சங்கர் அதிக சந்தோஷமாகி
சித்திரத்தை நீர் எழுதி அண்ணா தேரின்மேல் வைத்தாலும்
அந்த சித்திரத்தின் வாசகம் அண்ணா தெரியுமே பேர்பாதி

வென்றார் முகமுழிப்போ அண்ணா வேர்வை தெரியாதோ?
தோற்றார் முகமெனக்கு அண்ணா தோல்வி தெரியாதோ?
தோல்வியான பேர் அண்ணா தெய்வப் புரவியின் மேல் வரலாமா
ஏறியவர் வாரதுக்கு இரு துணுக்காய் வீசலாமே
அந்த மொழி சங்கர் சொல்ல அண்ணர் அப்போது ஏதுசொல்வார்