பட்டம் பொறுத்தவர்கள் சோழர் பாருலகம் ஆண்டவர்கள் நீ வெட்டுகிறேனென்று சொல்லி வசனங்கள் சொல்லாதே நம்முட புரவியின் மேல் சோழரை வைத்து நான்கூட்டி வந்தேன் துஷ்டத்தனமான வார்த்தை சொல்லாதே தம்பியரே ராஜ சிவசோழரைத்தான் நான் அழைத்துக் கூட்டி வந்தேன் அரண்மனைக்கு வந்து இப்போ ஆசாரம் போயிருந்து தங்கையரைத்தான் அழைத்தார் தார்வேந்தர் நல்லபொன்னு அந்தமொழி கேட்டு தங்கை அண்ணர் பக்கம் வந்து நின்றாள் தங்கையரைத்தான் பார்த்து தார்வேந்தர் ஏதுசொல்வார் அம்மா ராஜ சிவ சோழருக்கு அமுது படைக்க வேணும் அந்த மொழி கேட்டு தங்களை அழைத்தாளே தாதிகளை உத்தமியாள் தானழைக்க ஓடிவந்தார் தாதியர்கள் தாதியரைத்தான் பார்த்து தங்கையரும் ஏது சொல்வாள் ஈர்க்கிச்சம்பா அரிசி இணை இணையாய் தீட்டியேதான் ராஜ சிவ சோழருக்கு நன்றாய்ச் சமையுமென்றாள் அந்தமொழிகேட்டு தாதியர்கள் அதிதுரிதாய் ஓடிவந்து போசனங்கள் தானுமப்போ பொரிகறியும் தான்சமைத்து பதினாறு வகைக்கறியும் பாங்காகத் தான்சமைத்து பேடைமயில் பிள்ளையாண்டான் ராஜாவைக்கூட்டிவந்து நல்லெண்ணெய் சீயக்காய் நன்றாய் நலுக்கமிட்டு கொப்பரையில் நீரெடுத்து சோழருக்கு கோந்தை முழுக்காட்டி பன்னீருச் சொம்பெடுத்து புகுநீருத் தான்சொரிந்து முழுக்கித் தலையாத்தி சோழர் முற்றத்தில் வந்துநிற்க பச்சைவெட்டு சந்தனமும் பாரிமெத்த குங்குமமும் வெண்கலக்குளிகை ரொம்ப அதை மெத்திட்டுத் தான்குழைத்து கூட்டிக் குழைத்து வெண்கலக்குளிகை ரொம்பத்தான் வழித்து பொன் னுந்திரு மேனியிலே சோழர் போட்டுமே சந்தனத்தை | | |
|
|