பக்கம் எண் :

320அண்ணன்மார் சுவாமி கதை

அந்தமொழி கேட்டுப் பெருமாள் அதிதுரிதாய் ஓடிவந்து
பாதபணிகள் செய்து பாதாரம் தெண்டனிட்டு
என்னை அழைத்ததென்ன எனக்காளுவிட்டதென்ன?
அந்த மொழிகள் சொல்ல பொன்னர் அப்போது ஏதுசொல்வார்
ராஜசிவ சோழர் நம்மை தானறிய வேணுமென்று

குமாரரைத் தானனுப்பிக் கூட்டிவரச் சொன்னாரே
அனுப்பி வைத்த குமாரர் கூடவே போய் அறிந்து கொண்டு நான் வாரேன்
மைத்துனர்க்கு வார்த்தை சொல்லி வரவழைத்தார் உத்தமியை
அந்த மொழி கேட்டு உத்தமியாள் அதிதுரிதாய் ஓடிவந்து
அண்ணருட பக்கத்திலே அப்போ வந்து நிற்கையிலே

தங்கையரைத்தான் பார்த்து தார்வேந்தர் ஏது சொல்வார்
அம்மா சிவசோழர் நம்மை அறியவே வேணுமென்று
தன்னுடைய குமாரரை விட்டு தான் கூட்டி வரச்சொன்ன பின்பு
எண்ணம் புரியாமல் எதிர்ப்புமொழி சொன்னமானால்
காரிகாலச் சோழருக்கு கடுங்கோபபாகுமினி

அவருடகுமாரர் கூட நான் போய் அறிந்து வரவேணுமம்மா
அந்த மொழி கேட்டு உத்தமியாள் அப்போது ஏது சொல்வாள்
சிவசோழரை யறிந்து அவர் சீமையைக் காவல் கொண்டு
சந்தோஷமாகவேதான் தான்வருவீர் அண்ணா நீர்
முத்தான வாய் திறந்து உத்தமியால் உத்தரவு செய்த பின்பு
 

பொன்னர் சோழ தேசம் வருதல்
 

உறையூரு திசை நாடி உத்தமன்னன் வரும் போது
காகம் வலமாக கடுகி வழி தான் விடுது
கட்டிஇடம் சுட்டி இடம் காடான் இடமாச்சுதப்போ