பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை321

இதுவெல்லாம் நற்சகுனமென்று மனதிலெண்ணி
தார்வேந்தர் வருகையிலே கருங்காகம் தானும் வலமாச்சு
அந்த நல்ல சகுனம் கண்டு அசையாமல் நின்றுமப்போ
வாரேனென்று தான் திரும்பி தங்கையர்க்கு வகையுடனே ஏது சொல்வார்
அம்மா கட்டி இடம் சுட்டி இடம் காடான் இடமாச்சு

கொம்பேறுங்காகம் கொடியன் வலமாச்சு
நற்சகுனம் கண்டு நான் போகும் வேளையிலே
கருங்காகம் கூட கடுகிவலமாச்சுதென்று
அந்த சகுனம் சொல்ல உத்தமியாள் அப்போது ஏதுசொல்வாள்
வேத்தாளாய் போனவர்க்கு அண்ணா வெகுமதிகள் செய்திடுவார்

கால் நடையாய்ப் போனவர்க்கு கனகதண்டிதான் கொடுப்பார்
கருங்காகம் கூட கடுகி வலமாச்சுதென்று
விலங்கில்லா காவல் அண்ணா சற்று நேரம் வெயிற்காவல் இருக்க வேணும்
அதற்குமலையாதே அண்ணா ஆலோசனை செய்யாதே
காவலென்றசொல் கேட்டாள் அண்ணா கடுகவே எழுந்திரு நீ
நிலைமேல் சுருள் பிடித்து சின்ன அண்ணனுக்கு நடைமேல் எழுதிவிடு
ஓலை கண்ட அக்கணமே அண்ணன் ஓடி வருவார்கள்
எண்ணம் கலங்காதீர் இனி நடந்து போகுமண்ணா
உத்தமியாள் தானுஞ்சொல்ல அண்ணர் உறையூர் திசை நாடி
குணமாக வார்த்தை சொல்லி ராஜகுமாரருடன் கூட வழி நடந்தார்
உறையூருப் பட்டணத்தில் உற்ற மன்னர் வருகையிலே
ஆடல் பாடல் சங்கீதம் ராஜா கொலுவில் அன்புடன் இருக்கையிலே