பக்கம் எண் :

322அண்ணன்மார் சுவாமி கதை

சிவசோழர் குமாரர் கூட்டிவந்து பொன்னரையும் முன்னே விட்டார்
அய்யா பராக்குயென்று அப்போது கைமுகைஞ்சார்
அவர்கூட கைமுகைஞ்சார் குணமான சோழருந்தான்
அப்போது களரியெல்லாம் அடங்கிவைத்து ராஜாவும்
பொன்னரையும் தான்பார்த்து புனிதமுடன் சொல்லுகிறார்

நீர் வாசல் பிரதானியிடம் வசனங்கள் சொன்னதற்கு
அதற்கு நான் சம்மதித்து அப்படியே யாகுதென்று
சந்தோஷமாக குமாரரைத் தானும் அனுப்பிவைத்தேன்
வந்துநீ கண்டபோதே வெகுசந்தோ ஷமாச்செனக்கு
உன்னை அழைத்ததுதான் என் உத்திரத்தைப் பார்த்தாயோ?

என் சீமைக்குக் காவல் வைக்க உன்னை அழைத்தேனிப்போது
என் சீமை மேற்கே மதுக்கரைக்கும் கிழக்கே தஞ்சாவூர் கோட்டை
வடக்கேவான் காவேரி தெற்கே மதுரை எல்லை
நாற்சமுக்கம் உன்காவல் நலமாக ஏற்றுக்கொள் நீ
அந்த மொழிகள் சொல்ல பொன்னர் அப்போது ஏதுசொல்வார்
வடசீமை விட்டால் அய்யாநான் வளப்பம் பண்ணிக்கொடுப்பேன்
தென்சீமை விட்டால் அய்யா செழிப்புப்பண்ணி நான்தருவேன்
கீழ் சீமை விட்டால் நாங்கள் கப்பங்கட்டி ஆண்டிடுவோம்
மேல் சீமை விட்டதனால் எங்களால் வெல்ல முடியாது
காகம்போல கூட்டம் கூடி அவர்கள் கருங்களவு செய்வார்கள்

அவசூறை கொள்ளையிட்டால் அவர்களை அடக்க முடியாது
மேனாட்டு வேடுதளம் வெகுதளங்கள் மெத்தவுண்டு
மேல் சீமைக்காவல் கொண்டு அவர்களை வெல்ல முடியாது