பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை323

அந்த மொழிகள் சொல்லி சிவசோழர் அப்போது ஏது சொல்வார்
மூத்தகுமாரத்தியை திருக்கல்யாணம் முடித்து இப்போ நான் தருவேன்
உத்திரத்தில் கையெழுத்து ஒப்பம் போட்டு வைத்திருக்கும்
அந்தப்படிக்குத்தான் உனக்கு திருக்கல்யாணம் செய்து வைப்பேன்
அந்த மொழிகள் சொல்ல பொன்னர் அப்போது ஏது சொல்வார்

நீங்கள் சூரியகுல வாங்கிசத்தார் நாங்கள் ஆரியகுல வங்கிசத்தார்
உங்கள் குலத்துக்கு எங்கள் குலம் ஏற்குமோதான்?
எங்கள் குலத்துக்கும் உங்கள் குலம் இசைந்துமே வராது
அந்த மொழிகள் சொல்ல சோழருக்கு அதிகோபமாகியேதான்
என் வார்த்தைக்கு எதிர் வார்த்தை சொல்ல இதற்காக அழைத்துவந்தேன்
சிறைச்சாலை கூடத்திலே பொன்னரைச் சிறைக்காவல் வையுமடா
அந்த மொழிகள் சொல்ல வெள்ளித்தடிக்காரன் ஐயா எழுந்திரென்று
காவல் என்ற சொல் கேட்டு பொன்னர் கடுகியே எழுந்திருந்து
 
தம்பி சங்கருக்கு பொன்னர் ஓலை எழுதுதல்
 
நிலைமேல் சுருள் பிடித்து தம்பியர்க்கு நடைமேல் எழுதுகிறார்
தன்னாளாய் விட்டு சோழர் தன் கோட்டைக்கு வரவழைத்து
உபாயமாய் ஆளுவிட்டு சோழர் உட்கோட்டை வரவழைத்து
விலங்கில்லாக் காவல் நம்மை வெயில்காவல் வைத்தாரிப்போ
தாயாதி பழியாக தம்பிசங்கு தாமசங்கள் செய்யாமல்