இந்த ஓலைகண்ட அக்கணமே நீ ஒரு நொடியில் வரவேணும் மாயச்சுருள் எழுதி தம்பியர்க்கு வரவிட்டார் உத்தரவு அந்த மாயச்சுருள் ஓலை சங்கர் மடிமேல் விழுந்ததப்போ அந்த மாயச்சுருள் எடுத்து சங்கர் வாசித்துப்பார்க்கையிலே கண்கள் சிவந்துமேதான் சங்கருக்கு கடுங்கோபமாகியப்போ அத்தைபிள்ளை மைத்துனரை அழைத்தாரே நல்லசங்கு அந்தமொழி கேட்டு மைத்துனர் அதிதுரிதாய் ஓடிவந்து என்னை அழைத்ததிப்போ எதற்காக மைத்துனரே அந்தமொழி கேட்டு குமாரசங்கு அப்போது ஏது சொல்வார் சிவசோழர் செய்த வகை சேதியைக்கேளுமினி தன்னாளை விட்டு கோட்டைக்கு தனியாய் வரவழைத்து உற்றாளாய் விட்டு அவரை ஊருக்கு வரவழைத்து விலங்கில்லாக் காவல் வெயிற்காவல் வைத்துக்கொண்டார் காவலென்று சொன்னதற்கு சோழன் கடைவாய் கிழிக்கவேணும் அவர் சீமையிலே ஆட்டைப் பிடித்தோமா அருங்களவு செய்தோமா? மாட்டைப் பிடித்தோமா மகா களவு செய்தோமா? பூட்டை உடைத்தோமோ அவர் சீமையில் புரட்டுருட்டுச் செய்தோமா? விலங்கில்லாக் காவல் அண்ணரை வெயிற் காவல் வைத்தார்கள் உறையூருப் பட்டணத்தை அவசூறை கொள்ளையிட்டு சோழர் மகுடந்தரித்த முடி என் வாளுக்கிரையிடுவேன் அத்தைபிள்ளை மைத்துனர்க்கு அதுவார்த்தை சொல்லியேதான் வெற்றி மன்னன் பறைநகுலன் வீர சாம்புவனைத் தானழைத்து சுத்தாலைப்பட்டணம் தெருக்கள் தோறும் சுத்திவந்து | | |
|
|