பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை325

படைமுரசு முழக்குமடா படை மன்னர் கூட்டமிட
அந்த மொழிகள் சொல்ல வீரபாகு அதிதுரிதமாய் ஓடிவந்து
வெத்திகொம்பு கடிங்காலெடுத்து சாம்பான் விரசாக ஓடிவந்து
சுத்தாலைப்பட்டணத்தில் தெருவீதி வந்து நின்று
அடித்தானே கடிங்காளை பிடித்தானே வெற்றிக்கொம்பு

படைமுரசு சத்தம் கேட்டு படைமன்னர் கூட்டமிட்டார்
அழகுப் பெருவீதியெல்லாம் அடர்ந்த படைகூடுதப்போ
சிங்கார வீதியெல்லாம் சினந்துமே கூடுதப்போ
மலுக்கர் துலுக்கர்களும் மாறு பஷைக்காரர்களும்
படைக்குத் தலைவர்களும் பட்டாணி ராவுத்தரும்

காச்சு மூச்சரியாத கன்னடியர் ஒருகோடி
கீச்சு மூச்சரியாத கிண்கிணியர் ஒருகோடி
பேச்சு மூச்சரியாத பெயர்த் துலுக்கர் ஒரு கோடி
போட்டமண்டி வாங்காத பொந்திலியர் ஒரு கோடி
வைத்த மண்டி வாங்காத மாறுபாஷைக்கார்களும்

வெள்ளித்தடிக்காரர் விருது மன்னர் கூட்டமிட்டார்
ஆனைபடை சேனைதளம் அத்தனையும் கூட்டமிட்டு
கூட்டினார் குமாரதளம் வீரபாகு குமாரதளம் கூட்டமிட்டு
உத்தமன்னர் சிவசோழர் உறையூரு கொள்ளையிட
வரும்படையும் சேனையுடன் குமாரசங்கு வருகின்றாரப்போது

படைவரும் வேகத்திலே புழுதி பறக்குதே மேகம் போல
இரவு பகலாகி அப்போ பகலிரவு ஆனதென்ன
சர்ப்பம் அணிந்ததுவோ சந்திரகிரகணமோ
எரிக்கும் பகவானை இந்திரனைச் சூழ்ந்ததிப்போ
என்ன அதிசயம் தானிது ஏதோ தெரியவில்லை

உறையூருப் பட்டணத்தில் உள்ளவர்கள் சொல்லுகிறார்
பஞ்சாங்க வேதியரைப் பட்டினத்தார் கேட்கையிலே