பக்கம் எண் :

326அண்ணன்மார் சுவாமி கதை

அந்தப் புரோகிதனார் அப்போது ஏதுசொல்வார்
பொறுமை பொறுத்த பொன்னாண்டரைக் காவல்வைத்தீர்
பொன்னாண்டார் தம்பி படையெடுக்க புழுதி பறக்குதிப்போ
எரிக்கும் பகவானை இருள்வந்து சூழ்ந்ததிப்போ
பொன்னரைக் காவல்விட்டு வணக்கமுடன் செய்துகொண்டால்

உறையூருப் பட்டணங்கள் எப்படியும் தான்பிழைக்கும்
இல்லாதேபோனால் அவசூறை கொள்ளையாகும்
பண்டகசாலை பறந்த அரண்மனைக்கு
சுத்தாளை வாசலெல்லாம் சுத்தியே மூண்டுவிடும்

அந்தமொழிகள் சொல்ல பட்டணத்தில் அனைவோரும் ஓடியேதான்
அடிவணங்கிப் பணிகள் செய்து இந்த அவதூறு சொல்லையிலே
(ராஜாவும்) கேட்டு மனங்கலங்கி கிருபையுடன் பொன்னரையும்
காவல் விட்டு கூட்டிவர கடுகியே சொல்லியேதான்
அவர் அப்பனைகள் செய்தபின்பு பொன்னரை அக்கணமே கூட்டிவந்து
நல்லெண்ணெய் சீயக்காய் நன்றாய் நலுக்கமிட்டு
கொப்பரையில் நீரு வைத்து பொன்னரை கோந்தை முழுக்காட்டி
திருக்கடம்பநாதருட சன்னதியில் திருவிளக்குப் பார்க்க வைத்து
சிவசோழர் சமூகத்தில் தானழைத்துக் கூட்டி வந்து
ஊருக்கு மேற்கே உயர்ந்த மணல் மேட்டிலே தான்

வந்து இருக்கு தங்கே வான்படைகள் சேனை யெல்லாம்
நல்லெருது தம்பட்டம் நாகசுர பேரிகையும்