கொட்டுங்கிடு முடியும் கோவில் மேளதாளங்களும் எக்காளமுதலாய கிடுமுடியும் தான் முழங்க ஒட்டகை நாகரு இடிபோல் முழங்கிவர பாளையம் வந்திறங்கையிலே பட்டணங்கள் அத்தனையும் கண்டுமிரண்டுமப்போ பாளையத்தை கண்ணாலே தான்பார்த்து படையில்லை என்று நீர் பயந்தவன்போல் சொன்னீரே கள்ளர் படையை உன்தம்பி கடிதழைத்து வந்தாரிப்போ மறவர் படையை உன்தம்பி வரவழைத்து வந்தாரிப்போ அந்த மொழிகள்சொல்ல பொன்னர் அப்போது ஏதுசொல்வார் என் படையை அல்லாமல் இரவல்படை யாருமில்லை என்படையும் உன்படையும் எதிர்பொருதவேணுமினி படைமுரசு முழக்குமென்றார் சிவசோழர் படைமன்னர் கூட்டமிட ஒட்டகை மேல் நகாரு ஒரு பத்து தான்முழங்க ஆனையின் மேல் பேரிகையும் அநேகம் இடிபோல் முழங்குதப்போ படைமுரசு சத்தம் கேட்டு சோழர் படைமன்னர் கூட்டமிட்டார் அந்த நல்ல வேளையிலே புள்ளி சிறுசோழர் அதிதுரிதாயோடி வந்து சிவசோழரைப்பார்த்து ஏதுசொல்வார் அந்நேரம் நீர் சின்னத்துரைத்தனமா சிறு குழந்தை புத்தியோதான் என்ன இருக்க ஐயா என்னபுத்தி நீர்நினைத்தீர் கடலைக் கலக்குவானே பொன்னர் தம்பி கடல்நீரை உறிஞ்சுவானே அவரோட போர் செய்ய ஐயா யாராலும் முடியாது அவர் இன்பம் குளிரவே பொன்னரை உபசரித்து மனுக்கேட்டான் நாடுதழைக்குமினி நல்ல துரைத்தனங்கள் தான் நிலைக்கும் | | |
|
|