பக்கம் எண் :

328அண்ணன்மார் சுவாமி கதை

அந்த மொழி சொல்ல ராஜா அதிர்ந்து மனங்கலங்கி
படைமன்னர் கூடினதை நீங்கள் பாங்காகப் போங்களென்றார்
அந்தமொழி சொல்லி ராஜா பொன்னர் பக்கம் அணுகியேதான்
நான் கோபித்த கோபத்தை நீர் குற்றமாய்ப் பார்க்க வேண்டாம்
காவல் வைத்தாரென்ற மனக் கலக்கத்தை விட்டுவிடு

என் சீமைக்கு காவல்வைக்க உன்னை அழைத்து வந்தேன்
காவல்கொள்ளுமென்று நான் காரியம் கேட்டதற்கு
படையில்லை என்று சொல்லி மெத்த பயந்தவர்போல் சொன்னீரே
என் மாநாடு உன்னதுதான் நல்ல துரைத்தனமும் உன்னதுதான்
கோபத்தை நீர் பொறுத்து நும் தம்பியரை குணமுடனே வரவழையும்

அந்த மொழிகள் சொல்ல பொன்னர் அப்போ மனமிரங்கி
என்னுடைய தம்பியரை நீர் இனிப் பார்க்க வேணுமென்றால்
சிவசோழரையுந்தான் பாரான் திருக்கொலுவுந்தான் பாரான்
கோட்டைவாசல் சாத்தியே தலைவாசல் தான்திறத்தால்
தலைவாசல் வழியாக அவர் தனித்து வருகையிலே

சரணம் பணிந்தாரென்று தான் பொறுத்துக்கொள்ள வேண்டும்
சீட்டுந்திருமுகமும் சிருஷ்டித்தார் மாயோலை
காவலும் விட்டுழிப்போ நமக்கு கனக ஆபரணம் பூட்டியேதான்
உம்தம்பியரைத் தானழையும் என்று ராஜா உத்தரவு செய்தாரிப்போ
ஒற்றைக் குதிரைவிட்டு தம்பிசங்கு ஒருவனும் வரவேணும்
சீட்டுத் திருமுகமும் அண்ணா சீக்கிரமாய் ஏவிவிட்டார்